தமிழர்களின் உரிமைகளை மீட்டெக்க பாரம்பரிய விளையாட்டுகளுக்கான தடையை மீற வேண்டும் சினிமா டைரக்டர் களஞ்சியம் ஆவேசம்


தமிழர்களின் உரிமைகளை மீட்டெக்க பாரம்பரிய விளையாட்டுகளுக்கான தடையை மீற வேண்டும் சினிமா டைரக்டர் களஞ்சியம் ஆவேசம்
x
தினத்தந்தி 22 Dec 2016 4:00 AM IST (Updated: 22 Dec 2016 1:56 AM IST)
t-max-icont-min-icon

தமிழர்களின் உரிமையை மீட்டெக்க பாரம்பரிய விளையாட்டுகளுக்கான தடையை மீற வேண்டும் என்றும் காரைக்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சினிமா டைரக்டர் களஞ்சியம் கூறினார். ஆர்ப்பாட்டம் காரைக்குடி ஐந்துவிளக்கு அருகே தமிழர் தேசிய முன்னணி சார்பில் தமிழர்களின் பாரம்பர

காரைக்குடி

தமிழர்களின் உரிமையை மீட்டெக்க பாரம்பரிய விளையாட்டுகளுக்கான தடையை மீற வேண்டும் என்றும் காரைக்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சினிமா டைரக்டர் களஞ்சியம் கூறினார்.

ஆர்ப்பாட்டம்

காரைக்குடி ஐந்துவிளக்கு அருகே தமிழர் தேசிய முன்னணி சார்பில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளை நடைபெற தடுக்கும் பீட்டா அமைப்பையும், ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை நீக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் அருணா சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். நகர தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். நகர இளைஞரணி செயலாளர் ஞானவேலு வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் தமிழர் நல பேரியக்கத்தின் தலைவரும், சினிமா டைரக்டருமான களஞ்சியம் கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:–

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை உடைத்தெறிய வேண்டும். இதற்காக தமிழர்கள் ஒன்று திரண்டு, தடையை மீற வேண்டும். இது மாடு சம்பந்தப்பட்ட விஷயமல்ல தமிழர் சம்பந்தப்பட்ட விஷயம். பட்டுப்பூச்சிகளை கொன்று பட்டுப்புடவைகள் கட்டும் கூட்டம், மாடுகளை கொன்று விருந்து படைக்கும் கூட்டம் என்றும், காளைகளை துன்புறுத்துகிறோம் என்றும் கூறுகிறார்கள். தமிழர் தான் பூமி பந்தின் முதல் விஞ்ஞானி. தமிழரின் கலாசாரம், பண்பாடு, மொழி ஆகியவற்றை அழிக்க துடிக்கிறார்கள்.

உரிமைகளை மீட்டெக்க...

இதேபோல் சில நடிகர்–நடிகைகள் ஜல்லிக்கட்டிற்கு எதிராக கருத்து சொல்வதை வன்மையாக கண்டிக்க வேண்டும். அவர்கள் நடிக்கும் சினிமா படங்களை தமிழகத்தில் திரையிடக்கூடாது. மக்களின் பிரதிநிதிகளான மத்திய–மாநில அரசுகளின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காமல், விலங்குள் நல அமைப்பின் கருத்துகள் ஏற்கப்பட்டு நீதி மறுக்கப்படுகிறது. இது தமிழர்களின் உரிமைகளை பறிக்கும் செயலாகும். இதற்கு தமிழர்கள் எதிர்வினை ஆற்ற வேண்டும். தடையை மீறி நமது வீர விளையாட்டுகளை தொடர வேண்டும். உரிமைகளை மீட்டெக்க போராட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தேசிய முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் ராமன், மாநில துணை பொதுச்செயலாளர் மாறன், தேசிய ஒருங்கிணைப்பாளர் இமயம் சரவணன், பரப்புரையாளர் மதிவாணன், மஞ்சுவிரட்டு பாதுகாப்பு பேரவை தலைவர் சேது ஆறுமுகம், மாநில வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளர் எழிலரசு, தமிழ் தேச மக்கள் கட்சி மாவட்ட தலைவர் தமிழ் குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் முத்துக்குமார் நன்றி கூறினார்.


Next Story