தாசில்தார் பேச்சுவார்த்தையை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி போராட்டம் கைவிடப்பட்டது


தாசில்தார் பேச்சுவார்த்தையை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி போராட்டம் கைவிடப்பட்டது
x
தினத்தந்தி 22 Dec 2016 1:56 AM IST (Updated: 22 Dec 2016 1:56 AM IST)
t-max-icont-min-icon

இளையான்குடி கண்மாய்கரை நிறுத்தம் அருகே பொதுப்பணி துறைக்கு சொந்தமான இடத்தில் காட்டு கருவேல மரங்கள் வளர்ந்திருந்தது. இதனால் கருவேல மரங்களை வெட்டி அந்த இடத்தை சுத்தப்படுத்த வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தியது. இதனையடுத்து பொதுப்பணித்துறையினர்

இளையான்குடி,

இளையான்குடி கண்மாய்கரை நிறுத்தம் அருகே பொதுப்பணி துறைக்கு சொந்தமான இடத்தில் காட்டு கருவேல மரங்கள் வளர்ந்திருந்தது. இதனால் கருவேல மரங்களை வெட்டி அந்த இடத்தை சுத்தப்படுத்த வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தியது. இதனையடுத்து பொதுப்பணித்துறையினர் கருவேல மரங்களை வெட்டி சுத்தப்படுத்தினர். இதனை தொடர்ந்து மனிதநேய கட்சியினர், சுத்தப்படுத்தப்பட்ட இடத்தில் நிழல் தரும் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் அந்த மரக்கன்றுகளை பிடுங்கி எறிந்தனர்.

இதனால் பொதுப்பணித்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்போவதாக மனிதநேய கட்சியினர் அறிவித்திருந்தனர். இதுகுறித்து அறிந்த இளையான்குடி தாசில்தார் செந்தில் குமார், சமாதான கூட்டம் நடத்த மனிதநேய ஜனநாயக கட்சி, பொதுப்பணித்துறையினரை வரவழைத்தார். கூட்டத்தில் தாசில்தார், அனுமதியின்றி பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் மரக்கன்றுகள் நட்டு வைக்கக்கூடாது, அவர்களது அனுமதி பெற்றே நட வேண்டும் என்று விளக்கி கூறினார். இதனையடுத்து கூட்டத்தில் நடந்த சமாதான பேச்சுவார்த்தையை அடுத்து மனிதநேய ஜனநாயக கட்சியினர் தங்களது போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர். இந்த கூட்டத்தில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முத்துராமன், வருவாய் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story