அவதூறாக பேசிய மேலாளரை கண்டித்து வங்கியில் உள்ளிருப்பு போராட்டம்


அவதூறாக பேசிய மேலாளரை கண்டித்து வங்கியில் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2016 3:00 AM IST (Updated: 22 Dec 2016 1:56 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரியில் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் நேற்று பண பரிவர்த்தனைக்கான ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்திருந்தனர். வழக்கமான நாட்களை போன்று நேற்றும் பண பரிவர்த்தனை நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது வங்கியின் மேலாளர், சிங்கம்புணரி பேரூராட்சி அதிகாரி ரவிச்ச

சிங்கம்புணரி,

சிங்கம்புணரியில் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் நேற்று பண பரிவர்த்தனைக்கான ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்திருந்தனர். வழக்கமான நாட்களை போன்று நேற்றும் பண பரிவர்த்தனை நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது வங்கியின் மேலாளர், சிங்கம்புணரி பேரூராட்சி அதிகாரி ரவிச்சந்திரன் என்பவரை அவதூறாக பேசினாராம். இதனால் ஆத்திரமடைந்த அவர், பேரூராட்சி பணியாளர்களுடன் வங்கியினுள் உள்ளிருப்பு போரட்டம் நடத்தினார். மேலும் அவதூறாக பேசிய வங்கி மேலாளர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார். இதுகுறித்த தகவல் அறிந்த சிங்கம்புணரி போலீசார் போராட்டம் நடத்திய ரவிச்சந்திரனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் போலீசார் கொடுத்த அறிவுறுத்தலின்படி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story