கலெக்டரின் வாகனத்தை மறித்து கிராமத்தினர் முறையீடு அடிப்படை வசதி செய்து தர வலியுறுத்தல்
மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் கலந்து கொண்டு விட்டு திரும்பிக்கொண்டிருந்த கலெக்டர் சிவஞானத்தின் வாகனத்தை கிராமத்தினர் மறித்து தங்களது கிராமத்தில் அடிப்படை வசதி செய்து தரக்கோரியதால் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் தொடர்புத் திட்ட முகாம் ராஜபாளையம் அர
ராஜபாளையம்
மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் கலந்து கொண்டு விட்டு திரும்பிக்கொண்டிருந்த கலெக்டர் சிவஞானத்தின் வாகனத்தை கிராமத்தினர் மறித்து தங்களது கிராமத்தில் அடிப்படை வசதி செய்து தரக்கோரியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் தொடர்புத் திட்ட முகாம்ராஜபாளையம் அருகிலுள்ள கிறிஸ்துராஜபுரம் கிராமத்தில் நேற்று மக்கள் தொடர்புத்திட்ட முகாம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. முகாமில் 258 பயானாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 47 ஆயிரத்து 570 மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அந்த கிராமத்தில் உள்ள பயனாளிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று கலெக்டர் சிவஞானம் வழங்கினார்.
இந்த முகாமுக்கு கலெக்டர் மற்றும் அதிகாரிகள் அரசு பஸ்சில் சென்றிருந்தனர். முகாம் முடிவடைந்ததும் அனைவரும் பஸ்சில் விருதுநகருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
முறையீடுகிருஸ்துராஜபுரம் விலக்கில் பஸ் வந்தபோது தெற்கு மீனாட்சிபுரம் கிராம மக்கள் அதனை மறித்தனர். தங்களது கிராமத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்பட வில்லை என்றும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது என்றும் கூறினர். மேலும் தங்களது கிராமத்தை கலெக்டர் நேரில் வந்து பார்வையிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். ஆனால் கலெக்டர் பஸ்சை விட்டு இறங்காததால் உள்ளே செல்ல சிலர் முயன்றனர். அவர்களை சுற்றி நின்றிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
பரபரப்புபின்னர் கலெக்டருடன் வந்திருந்த அதிகாரி ஒருவர் பஸ்சில் இருந்து இறங்கி வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கோரிக்கைகளை மனுவாக கொடுத்தால், கலெக்டர் நேரில் வந்து பார்வையிடுவார் என்றார். அதிகாரியின் சமரசத்தை ஏற்ற கிராம மக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை அதிகாரியிடம் கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.
கலெக்டர் சென்ற வாகனம் நிறுத்தப் பட்டதால் அப் பகுதியில் சுமார் அரை மணி நேரம் பரபரப்பு நிலவியது.