பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த பொக்லைன் எந்திர டிரைவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை தர்மபுரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

தர்மபுரி,
பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த பொக்லைன் எந்திர டிரைவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தர்மபுரி மகளிர் கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது.
பாலியல் பலாத்காரம்
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள கொண்டகரஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(வயது 21), பொக்லைன் எந்திர டிரைவர். இவர் வீட்டு வழியாக அந்த பகுதியை சேர்ந்த 15 வயதான 8-ம் வகுப்பு மாணவி பள்ளிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் தனது வீட்டு வழியாக சென்ற அந்த மாணவியை சந்தோஷ்குமார் கடத்தி சென்றார். பின்னர் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இந்த நிலையில் தங்கள் மகளை காணாததால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், பொம்மிடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியை மீட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி இருப்பது தெரியவந்தது.
10 ஆண்டு கடுங்காவல்
இதுதொடர்பான புகாரின் பேரில் சந்தோஷ்குமாரை பொம்மிடி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் முடிவில் சந்தோஷ்குமார் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானது.
இதையடுத்து சந்தோஷ்குமாருக்கு பாலியல் பலாத்கார குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மாணவியை கடத்திய குற்றத்திற்காக 3 ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்து மாவட்ட மகளிர் நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிடப்பட்டது.

Next Story