கிருஷ்ணகிரி அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அணையில் தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
கிருஷ்ணகிரி அணை
கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. அதன் காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வந்தது. இதன் காரணமாக கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், தென்பெண்ணை ஆற்று வழியாக கிருஷ்ணகிரி அணையை வந்தடைந்தது.
கிருஷ்ணகிரி அணையின் மொத்த கொள்ளளவு 52 அடியாகும். நேற்றைய நீர்மட்டம் 47.60 அடியாகும். அணைக்கு வினாடிக்கு 268 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 106 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வழக்கமாக கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் 48 அடியை அடைந்தவுடன் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் தென்பெண்ணையாற்று கரையோர பகுதி மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்படுவது வழக்கம்.
வெள்ள அபாய எச்சரிக்கை
தற்போது பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யாமல் இருப்பதாலும், நீரின் அளவு முன்பை காட்டிலும் குறைவாக வருவதாலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடலாமா? என அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கும் பட்சத்தில் 5 மாவட்ட தென்பெண்ணையாற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Next Story