19 தொழிலாளர்களை பலி கொண்ட வெடிமருந்து தொழிற்சாலையின் நிலம் தொடர்பான தடையில்லா சான்று ரத்து

திருச்சி,
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே டி.முருங்கப்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலையில் கடந்த 1-ந் தேதி நடந்த பயங்கர வெடி விபத்தில் 19 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே வெடிமருந்து தொழிற்சாலையில் 19 பேர் பலியான சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட கலெக்டர் பழனிசாமி உத்தரவிட்டார். மாவட்ட வருவாய் அதிகாரி தர்ப்பகராஜ் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் டி.முருங்கப்பட்டி கிராமத்தில் தனியார் வெடிமருந்து தொழிற்சாலை அமைப்பதற்காக கடந்த 1998-ம் ஆண்டில் நிலம் தொடர்பாக தடையில்லா சான்று வழங்கப்பட்டது. இந்த தடையில்லா சான்றை மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில், மாவட்ட வருவாய் அதிகாரி தர்ப்பகராஜ் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

Next Story