பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு, பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் சரத்குமார் பேட்டி

கொள்ளிடம் டோல்கேட்,
பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு, பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறினார்.
செயல்வீரர்கள் கூட்டம்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருச்சி மண்டல அளவிலான செயல்வீரர்கள் கூட்டம், திருச்சி நெ.1 டோல்கேட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அக்கட்சியின் திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் முரளிதரன் தலைமை தாங்கினார். திருச்சி மேற்கு மாவட்ட செயலாளர் குணசேகரன், புறநகர் மாவட்ட செயலாளர் முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் கலந்து கொண்டு, கட்சியின் நிர்வாகிகளுக்கு நியமன ஆணையை வழங்கி பேசினார். அப்போது, சமத்துவ மக்கள் கட்சியை வளர்ப் பதற்கு தொண்டர்கள் அனைவரும் சிறப்பாக மக்களுக்கு பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஜெயலலிதாவுக்கு அஞ்சலி
முன்னதாக கூட்டத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட மாநகர், புறநகர், மாவட்டம் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் சின்னத்துரை வரவேற்றார். முடிவில் திருச்சி கிழக்கு மாநகர் துணை செயலாளர் மகேஷ் நன்றி கூறினார்.
பின்னர் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகள் பயணம் செய்தவர் சசிகலா. அரசியல் செயல்பாடுகளையும், அனுபவங்களையும் நன்கு தெரிந்தவர். அவர் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக வந்தால், கட்சி சிறப்பாக இருக்கும்.
அச்சுறுத்தும் செயல்
கணக்கில் வராத கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய அரசு வருமான வரி சோதனை நடத்துவது தவறு இல்லை. ஆனால் சில நாட்களுக்கு முன்புதான், தமிழக முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு வந்திருக்கிறார். இந்நிலையில் தமிழக அரசின் தலைமை செயலாளர் வீட்டிலும், தலைமை செயலகத்திலும் திடீரென வருமான வரி சோதனை செய்திருப்பது ஆளும் கட்சியை மட்டுமல்லாமல், அனைவரையும் அச்சுறுத்தும் செயலாக இருக்கிறது.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, முதன் முதலாக போராட்டங்களை நடத்தியது சமத்துவ மக்கள் கட்சிதான். ஜல்லிக்கட்டு நடைபெறாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. இது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாகும். கலாச்சார அடிப்படையில் இருக்கும் சுவடுகளை அழிப்பதற்கு முயற்சி ஏற்பட்டு கொண்டிருக்கிறது. எனவே வரும் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story