பெரம்பலூர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி; 45 படைப்புகள் இடம் பெற்றன


பெரம்பலூர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி; 45 படைப்புகள் இடம் பெற்றன
x
தினத்தந்தி 22 Dec 2016 4:00 AM IST (Updated: 22 Dec 2016 2:42 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி; 45 படைப்புகள் இடம் பெற்றன

பெரம்பலூர்,

பெரம்பலூரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஜவகர்லால் நேரு பெயரில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகளின் 45 படைப்புகள் இடம் பெற்று இருந்தன.

அறிவியல் கண்காட்சி

பெரம்பலூரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில், மாணவ-மாணவிகளின் அறிவியல் திறமைகளை வெளிக்கொணரும் பொருட்டு ஜவகர்லால் நேரு பெயரில் அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது. இந்த கண்காட்சியில், இரவு நேர பயணங்களின் போது வாகன ஓட்டுனர் தூங்காமல் இருக்கும் வகையில் அலாரம் எழுப்பும் கண்ணாடி, இயற்கை முறையில் கொசுக்களை விரட்டும் சாதனம், மண்பானைகளில் நீரினை ஊற்றி வைத்து காய்கறிகளை பதப்படுத்துதல், சூரியஒளிக்கதிர் மூலம் மின்சாரம் தயாரித்து மின்தேவையை பூர்த்தி செய்தல், மது குடித்து விட்டு இயக்கினால் செயல்படாமல் போகும் வாகனம், காந்தவிசை கார்கள் மூலம் விபத்தினை தடுத்தல் உள்ளிட்ட 45 அறிவியல் படைப்புகள் இடம் பெற்றிருந்தன.

இந்த படைப்புகளை அப்பள்ளியில் 6 முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் உருவாக்கியிருந்தனர். கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த படைப்புகளை மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். கண்காட்சியை பார்வையிட்ட மாணவர்களுக்கு படைப்புகள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

சிறந்த படைப்புகள் தேர்வு

கண்காட்சியில் அறிவியல் முதுநிலை ஆசிரியர்கள் தமிழரசன், தமிழ்செல்வன், ரத்னம் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு 6 சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர். இதில் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள் சென்னையில் நடைபெறவுள்ள மண்டல அளவிலான ஜவகர்லால் நேரு அறிவியல் கண்காட்சி போட்டியில் பங்கேற்க உள்ளனர். அதில் வெற்றி பெறுவோர் தேசிய அளவிலான போட்டிக்கு அழைத்து செல்லப்படுவர்.

Next Story