அங்கீகாரம் பெறாத வாகனங்களில் கழிவுநீரை கொண்டு சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் கோவிந்தராஜ் எச்சரிக்கை


அங்கீகாரம் பெறாத வாகனங்களில் கழிவுநீரை கொண்டு சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் கோவிந்தராஜ் எச்சரிக்கை
x
தினத்தந்தி 22 Dec 2016 4:15 AM IST (Updated: 22 Dec 2016 2:42 AM IST)
t-max-icont-min-icon

அங்கீகாரம் பெறாத வாகனங்களில் கழிவுநீரை கொண்டு சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் கோவிந்தராஜ் எச்சரிக்கை

கரூர்,

அங்கீகாரம் பெறாத வாகனங்களில் கழிவுநீரை கொண்டு சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கோவிந்தராஜ் கூறினார்.

கண்காணிப்புக்குழு கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மனிதனே மனிதக் கழிவுகளை அகற்றுவது குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

இதுபோன்று கோட்ட அளவில் 3 மாதங்களுக்கு ஒரு முறை கூட்டம் நடத்தப்பட வேண்டும். வீடுகள்தோறும் கட்டாயம் கழிப்பறைகள் கட்டித்தர வேண்டும். கரூர் மாவட்டத்தை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாவட்டமாக மாற்ற அலுவலர்கள் ஒருமித்த கருத்துடன் பணியாற்ற வேண்டும். கழிவுநீர் தொட்டிகள் சுத்தம் செய்யும் பணியாளர்களுக்கு கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். மனிதனே மனிதக்கழிவுகளை அகற்றுவது குறித்து கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை கட்டுவது குறித்து காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற விழாக்களில் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

நடவடிக்கை

எடுத்துச் செல்லும் கழிவுகளை ஆற்றங்கரை, குளக்கரை, ரெயில் தண்டவாளம் போன்ற பொது இடங்களில் கொட்டாமல் கண்காணிக்க வேண்டும். புலியூர், கிருஷ்ணராயபுரம், உப்பிடமங்கலம் போன்ற பேரூராட்சிகளின் அனைத்து குப்பைகளையும் கரூர் நகராட்சிக்குட்பட்ட ஒரே இடத்தில் சேமிக்கலாம். அரசு அங்கீகாரம் பெறாத வாகனங்களில் கழிவு நீரை எடுத்துச் செல்லக்கூடாது. அவ்வாறு எடுத்துச்சென்றால் அதன் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story