மணலுக்கு பணமாக தர வலியுறுத்துவதால் லாரி உரிமையாளர்கள் மணல் குவாரியில் உள்ளிருப்பு போராட்டம்


மணலுக்கு பணமாக தர வலியுறுத்துவதால் லாரி உரிமையாளர்கள் மணல் குவாரியில் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2016 4:15 AM IST (Updated: 22 Dec 2016 2:43 AM IST)
t-max-icont-min-icon

மணலுக்கு பணமாக தர வலியுறுத்துவதால் லாரி உரிமையாளர்கள் மணல் குவாரியில் உள்ளிருப்பு போராட்டம்

தா.பழூர்,

மணலுக்கு பணமாக தர வலியுறுத்துவதால் லாரி உரிமையாளர்கள் மணல் குவாரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணல் குவாரி

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தை சேர்ந்த வாழைக்குறிச்சி பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் அரசு அனுமதி பெற்ற மணல் குவாரி உள்ளது. இங்கிருந்து மணல் எடுக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு லாரிகள் மூலம் எடுத்து செல்லப்படுகிறது. இந்தநிலையில் இந்த மணல் குவாரியில் வாங்கும் மணலுக்கு உரிய தொகையை லாரி டிரைவர்கள் குவாரி நிர்வாகத்திடம் பணப் பட்டுவாடா மூலம் செய்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது வங்கியில் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு காரணமாக, லாரி உரிமையாளர்கள் குவாரி நிர்வாகத்திடம் காசோலை வழங்கி வருகின்றனர். ஆனால் குவாரி நிர்வாகத்தினர் காசோலை வேண்டாம், பணமாக கொடுங்கள் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

உள்ளிருப்பு போராட்டம்

இதில் அதிருப்தி அடைந்த லாரி உரிமையாளர்கள் மணல் குவாரியில் 20-க்கும் மேற்பட்ட லாரிகளை நிறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் குவாரியை சேர்ந்தவர்கள், இதுகுறித்து மேலிடத்தில் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதை ஏற்று லாரி உரிமையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story