பூதலூரில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை முன்பு பொதுமக்கள் சமையல் செய்து போராட்டம்


பூதலூரில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை முன்பு பொதுமக்கள் சமையல் செய்து போராட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2016 4:15 AM IST (Updated: 22 Dec 2016 2:44 AM IST)
t-max-icont-min-icon

பூதலூரில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை முன்பு பொதுமக்கள் சமையல் செய்து போராட்டம்

திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் பூதலூர் ஜெகன்மோகன்நகர் பகுதியில் கல்லணை கால்வாய் கரையில் புதிதாக அரசு டாஸ்மாக்கடை நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டது. இந்த நிலையில் அனைத்திந்திய மாதர் சங்க தஞ்சை மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி, பூதலூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் கண்ணன் மற்றும் ஜெகன்மோகன் நகர், பாத்திமாநகர் ஆகிய பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று கூடி நேற்று காலை அந்த டாஸ்மாக்கடையை மூடக்கோரி கடை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அடுப்பு வைத்து சமையல் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அன்பழகன்(திருவையாறு), ஜெயச்சந்திரன்(வல்லம்) மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடையை மூடினால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்து தாசில்தார் கஜேந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் டாஸ்மாக் உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் இன்று(வியாழக்கிழமை) அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், அதுவரை டாஸ்மாக் கடை திறக்கப்படாது என்றும் தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் 2 மணி நேரம் நடைபெற்றது.


Next Story