பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி நாகையில் வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி நாகையில் வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2016 4:15 AM IST (Updated: 22 Dec 2016 2:44 AM IST)
t-max-icont-min-icon

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி நாகையில் வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்,

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி நாகையில் வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் மோகன், நாத்திகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பால்ராஜ், மாநில செயலாளர் சுகுமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஜோதிமணி, மாநில பொது செயலாளர் அந்துவன்சேரல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில், ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் 8-வது ஊதிய திருத்தக்குழுவில் கிராம உதவியாளர்களுக்கு வழங்க வேண்டும்.

பொங்கல் போனஸ்

ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். பொங்கல் போனஸ் சதவீத அடிப்படையில் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த புகழேந்தி, தமிமுன்அன்சாரி, கிருஷ்ணமூர்த்தி, ராணி, பாபுராஜ், பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க மாவட்ட பொருளாளர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.

Next Story