குடிநீர் தட்டுப்பாட்டை போக்க திருவாலி, பெருந்தோட்டம் ஏரிகளில் ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை கலெக்டர் பழனிசாமி உத்தரவு

திருவெண்காடு,
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க திருவாலி, பெருந்தோட்டம் ஏரிகளில் ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி கூறினார்.
குடிநீர் தட்டுப்பாடு
சீர்காழி அருகே பெருந்தோட்டம், தென்னாம்பட்டினம், மார்த்தான்பட்டினம், கீழமூவர்க்கரை, மேலமூவர்க்கரை, கோணயாம்பட்டினம், திருவாலி, திருநகரி, நெப்பத்தூர் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் நிலத்தடிநீர் உப்பு நீராக மாறிவிட்டது. இதனால் குடிப்பதற்கு கூட தண்ணீர் இன்றி கிராம மக்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், சில கிராமங்களில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டாலும், அது மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் போதுமானதாக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக நிலவுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள், கலெக்டருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி, திருவெண்காடு அருகே திருவாலி மற்றும் பெருந்தோட்டம் ஏரிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பெருந்தோட்டம் ஏரியில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் தட்டுப்பாடு உள்ள கிராமங்களான கோணயாம்பட்டினம், மார்த்தான்பட்டினம், தென்னாம்பட்டினம் ஆகிய கிராமங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது குறித்தும், திருவாலி ஏரியில் ஆழ்துளை கிணறு அமைத்து அதனை சுற்றி உள்ள கிராமங்களான திருவாலி, நெப்பத்தூர், திருநகரி ஆகிய பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது மாவட்ட திட்ட அலுவலர் சங்கர், சீர்காழி தாசில்தார் மலர்விழி, ஊராட்சி ஒன்றிய ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story