மன்னார்குடியில் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் பேராசிரியரை கண்டித்து நடந்தது

மன்னார்குடி,
கல்லூரி பேராசிரியரை கண்டித்து மன்னார்குடியில் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
மன்னார்குடி அரசு கலை கல்லூரியில் கடந்த நவம்பர் மாதம் 11-ந்தேதி பல்கலைக்கழக பருவத்தேர்வு நடைபெற்றது. இதில் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இந்தநிலையில் 3-ம் ஆண்டு வணிகவியல் மாணவன் அசாருதீன் தேர்வு எழுதிய விடைத்தாளை காணவில்லை என்று கூறி தேர்வு மேற்பார்வையாளர் அந்த மாணவனை அழைத்து விடைத்தாளை எடுத்து சென்று விட்டதாக கூறி மீண்டும் அந்த தேர்வை எழுத சொன்னார். மேலும் தேர்வு எழுதி கொண்டிருந்த போது காணாமல் போன விடைத்தாள் கிடைத்துவிட்டதால் அந்த மாணவனை திருப்பி அனுப்பியதாகவும் தெரிகிறது. இந்தநிலையில் ஒரே தேர்வை 2 முறை எழுத சொல்லியதால் எந்த விடைத்தாளை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பியுள்ளார்கள் என்று தெரியாமல் உள்ளதாகவும், இந்த சம்பவத்தை யாரிடமும் சொல்ல கூடாது என கூறி இயற்பியல்துறை பேராசிரியர் மாணவனை மிரட்டியதை கண்டித்தும், இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியும் நேற்று காலை அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கை மனு
ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜெ.பி.வீரபாண்டியன், கே.அபிநயா ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் மாணவர் பெருமன்ற ஒருங்கிணைப்பாளர் துரைஅருள்ராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பாலமுருகன் ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாணவர் மன்ற நிர்வாகிகள் திரிசங்குராஜன், சந்தோஷ், அணீஷ், இர்பான், நைமூல், தினேஷ் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து மன்னார்குடி உதவி கலெக்டர் செல்வசுரபியிடம் சம்பந்தப்பட்ட பேராசிரியரிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Next Story