2 ஆண்டுகளில் அரசு சார்பில் நடந்த வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1000 பேருக்கு வேலை கிடைத்துள்ளது கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தகவல்

நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் அரசு சார்பில் நடந்த வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1000 பேருக்கு வேலை கிடைத்துள்ளதாக கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்தார்.
வேலைவாய்ப்பு முகாம்
தமிழக அரசின் மூலம், படித்து– வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஊரக பகுதிகளில் நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்கி கொடுக்கும் வகையில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
அதன் அடிப்படையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
முகாமை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
1000 பேருக்கு....
தமிழக அரசு, மகளிர் திட்டம் வாயிலாக மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கு வழிவகை செய்து வருகிறது. மேலும் படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிட, மாவட்ட நிர்வாகம் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்திட தெரிவித்துள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இரண்டாம் முறையாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மகளிர் திட்டம் மூலம் வேலை வாய்ப்பு முகாம் இன்று (நேற்று) நடைபெறுகிறது. கடந்த ஆண்டு மற்றும் இவ்வாண்டில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு படிப்புகளை முடித்த இளைஞர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது அவர்கள் அந்தந்த நிறுவனங்களில் சிறப்பாக பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்
நமது மாவட்டத்தை பொறுத்தவரை, 93 சதவீதம் படித்தவர்கள் உள்ளனர். இதில் 18 முதல் 35 வயது வரை 100 சதவீதம் படித்தவர்களே இருக்கிறார்கள். ஆகையால் வேலைவாய்ப்பு என்பது குமரி மாவட்டத்தை பொறுத்தவரை, மிகுந்த போட்டிகளை கொண்டிருக்கிறது. எனவே முகாமில் பங்கேற்ற அனைத்து இளைஞர்களும், தங்களது கல்வி தகுதிக்கேற்ப அனைத்து நிறுவனங்களிலும் பங்கேற்பதுடன், தேர்வுகளில் நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் கலந்து கொள்ள வேண்டும். தேர்வுகளில் வெற்றி பெறாத இளைஞர்கள் மீண்டும் நடைபெறும் முகாமில் பங்கேற்பதோடு, அரசு நடத்தும் தேர்வுகளில் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். வெற்றி பெறும்வரை மாணவர்கள் முயற்சித்துக் கொண்டிருக்க வேண்டும்.
நேர்முக தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்கள் உடனடியாக அந்த நிறுவனத்தில் சேர்ந்து கொண்டு, சிறப்பான பணி மேற்கொள்வதோடு, நமது மாவட்டத்தில் உள்ள மற்ற மாணவர்களுக்கும் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.
இந்த முகாமில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கிட சுமார் 44 நிறுவனங்கள் அழைத்துவரப்பட்டுள்ளது. இம்முகாமில் சுமார் 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறினார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனரும், மகளிர் திட்டத்தின் திட்ட அதிகாரியுமான ஹெட்ஸி லீமா அமலினி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அதிகாரி பிரம்மநாயகம், ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் முதல்வர் எட்வின் ஞானதாஸ், உதவித்திட்ட அதிகாரிகள் (திறன் மற்றும் பணியமர்வு) அந்தோணி சிலுவை, கலைச்செல்வி (சமூக ஒருங்கிணைப்பு மற்றும் நிறுவன கட்டமைப்பு), பிச்சையா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஏராளமான மாணவ, மாணவிகள், இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்து கொண்டனர்.

Next Story