பாளையங்கோட்டையில் போக்குவரத்து பணியாளர்கள் உண்ணாவிரதம்

நெல்லை,
தமிழ்நாடு போக்குவரத்துத்துறை பணியாளர் சங்கத்தினர் பாளையங்கோட்டையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் முன்பு நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். சங்க மாநில பொதுச் செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் மாநில துணை தலைவர் மதுசூதன்நாயர் கலந்து கொண்டு உண்ணாவிரதத்தை தொடங்கிவைத்து பேசினார்.
போக்குவரத்து துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கண்டிப்பதாகவும், காலிப்பணியிடங்களை உடனே நிரப்பவேண்டும், இளநிலை உதவியாளர்கள் உள்ளிட்டோருக்கு பதவி உயர்வு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வற்புறுத்தியும் இந்த உண்ணாவிரதம் நடந்தது.
போக்குவரத்து துறை பணியாளர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதையொட்டி பாளையங்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. ஓட்டுனர் உரிமம், பழகுனர் உரிமம் வழங்குதல் உள்ளிட்ட எந்த பணிகளும் நடைபெறவில்லை. இதனால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story