பாளையங்கோட்டை அய்யப்பன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

நெல்லை,
பாளையங்கோட்டை பொதிகைநகர் அய்யப்பன் கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
1,008 சங்காபிஷேகம்
பாளையங்கோட்டை பெருமாள்புரம் பொதிகைநகரில் அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மண்டல பூஜை நடந்து வருகிறது. இந்த ஆண்டு மண்டல பூஜை நேற்றுமுன்தினம் காலையில் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மகாலட்சுமி ஹோமமும், சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடந்தது.
நேற்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமுமம், 10 மணிக்கு தரையில் நெல் பரப்பி அதன் மேல் 1,008 சங்குகளை பரப்பி அதில் புனித நீர் ஊற்றி சிறப்பு பூஜை நடந்தது. இந்த சங்குகளால் அய்யப்பனின் உருவம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து களபாபிஷேகமும், சிறப்பு பூஜையும் நடந்தது. பகல் 11 மணிக்கு அய்யப்பனுக்கு 1,008 சங்காபிஷேகமும், புனித நீர் அபிஷேகமும், 16 வகையான அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவில் பக்தி இசை நிகழ்ச்சியும், அய்யப்ப பஜனையும் நடந்தது.
கோடி அர்ச்சனை
இன்று (வியாழக்கிழமை) காலை முதல் 25–ந் தேதி வரை அய்யப்ப சுவாமிக்கு கோடி அர்ச்சனை நடக்கிறது. 25–ந் தேதி மாலை 6.30 மணிக்கு விளக்கு பூஜை, கன்னிபூஜை, படிபூஜை, இரவு 9.30 மணிக்கு சிறப்பு தீபாரதனை நடக்கிறது. 26–ந்தேதி அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமமும், 108 கலசபூஜையும், கஜபூஜை, கோ பூஜை நடக்கிறது.
காலை 7 மணிக்கு பால்குட ஊர்வலமும், 9.30 மணிக்கு 108 கலச அபிஷேகமும், 108 படி நெய், 508 இளநீர் உள்பட 18 வகையான அபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. மதியம் 1 மணிக்கு அன்னதானமும், மாலை 6 மணிக்கு மேளதாளம் முழங்க யானை, குதிரை முன்செல்ல அய்யப்பசாமி வீதி உலாவும், இரவு 7.30 மணிக்கு புஷ்பாஞ்சலியும் நடக்கிறது.
ஏற்பாடுகளை அய்யப்ப சேவா சங்கத்தினர் செய்து வருகிறார்கள்.

Next Story