காசிமேட்டில் நடந்த மீனவர் கொலை வழக்கில் மேலும் 7 பேர் கைது


காசிமேட்டில் நடந்த மீனவர் கொலை வழக்கில் மேலும் 7 பேர் கைது
x
தினத்தந்தி 22 Dec 2016 3:34 AM IST (Updated: 22 Dec 2016 3:34 AM IST)
t-max-icont-min-icon

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பூண்டிதங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 35). மீனவரான இவர் கடந்த 18-ந் தேதி காசிமேடு கடற்கரை வார்பு பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

ராயபுரம்,

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பூண்டிதங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 35). மீனவரான இவர் கடந்த 18-ந் தேதி காசிமேடு கடற்கரை வார்பு பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவருடைய எதிர்வீட்டை சேர்ந்த பரமேஸ்வரி (42) என்ற பெண்ணை கைது செய்தனர்.

மேலும் இதில் தொடர்புடைய திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த ராம்கி என்கிற குள்ள கார்த்திக் (22), சரத் (24), ராஜசேகரன் என்கிற மஸ்தான் (18) மற்றும் 4 சிறுவர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான பரமேஸ்வரி மற்றும் 7 பேரும் ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். கோர்ட்டு உத்தரவுப்படி பரமேஸ்வரி உள்பட 3 பேர் புழல் சிறையிலும், சிறுவர்கள் சீர்திருத்தப்பள்ளியிலும் அடைக்கப்பட்டனர். 

Next Story