‘கிறிஸ்துமஸ்’ ருசிகரம்..!


‘கிறிஸ்துமஸ்’ ருசிகரம்..!
x
தினத்தந்தி 23 Dec 2016 8:00 AM IST (Updated: 22 Dec 2016 5:22 PM IST)
t-max-icont-min-icon

கிறிஸ்துமஸ் மரம் அலங்கரிக்கப்படுவதற்கு, ஒரு சுவையான காரணமும், கதையும் உண்டு. 17–ம் நூற்றாண்டின் குளிர்கால மாலை நேரத்தில், மார்டின் லூதர் என்பவர் காட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வானில் இருள் சூழ்ந்துவிட்டது. இதனால் பயத்தின் பிடியில் மார்ட்டின் சிக்கிக்

கிறிஸ்துமஸ் மரம்

கிறிஸ்துமஸ் மரம் அலங்கரிக்கப்படுவதற்கு, ஒரு சுவையான காரணமும், கதையும் உண்டு. 17–ம் நூற்றாண்டின் குளிர்கால மாலை நேரத்தில், மார்டின் லூதர் என்பவர் காட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வானில் இருள் சூழ்ந்துவிட்டது. இதனால் பயத்தின் பிடியில் மார்ட்டின் சிக்கிக் கொண்டார். மனதில் இறைவனை நினைத்தபடியே காட்டை கடந்து கொண்டிருந்தவருக்கு, நட்சத்திரங்கள் மின்னும் அதிசய மரம் தென்பட்டுள்ளது. அதன் பிரகாசத்தில் காட்டைக் கடந்தவர், காட்டிலிருந்த பைன் மர கன்றையும் கையோடு எடுத்து சென்றிருக்கிறார். பைன் மரத்தை வீட்டில் நட்டு வளர்த்ததுடன், அதை விளக்குகளைக் கொண்டும் அலங்கரித்திருக்கிறார். இந்தச் சம்பவம் பற்றிய தகவல் ஜெர்மன் நாட்டில் பரவ... பயத்தையும், கஷ்டங்களையும் போக்கும் கலாசாரமாக கிறிஸ்துமஸ் மரம் வேரூன்றி வளர்ந்து நிற்கிறது.

கிறிஸ்துமஸ் பாட்டி

உலக நாடுகள் அனைத்திலும் ‘சாண்டாக்ளாஸ்’ என்ற கிறிஸ்துமஸ் தாத்தா உலா வருவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் ஜப்பான் நாட்டில் மட்டும் ‘கிறிஸ்துமஸ் பாட்டி’ உலா வருகிறார். விவரம் கேட்டால்... ‘தாத்தாவைவிட பாட்டிக்கே பிள்ளைகளின் மீது அன்பு அதிகம்’ என்கிறார்கள்.

இத்தாலியில் கிறிஸ்துமஸ்

கிறிஸ்துமஸ் அன்று இத்தாலியர்கள் பசுக்களை குளிப்பாட்டி, ராஜ மரியாதை கொடுக்கிறார்கள். ஏனெனில் இயேசு கிறிஸ்து மாட்டு தொழுவத்தில் பிறந்தபோது அருகிலிருந்த பசு மாடுகள், கடும் குளிரில் இருந்த இயேசுவை காப்பாற்றுவதற்காக அவ்வப்போது பெருமூச்சு விட்டு அவருக்கு உஷ்ணம் கொடுத்ததாம். அந்த நம்பிக்கையின் சம்பிரதாயம்தான் இது.

கிறிஸ்துமஸ் விதிகள்

பின்லாந்து நாட்டில் கிறிஸ்துமஸ் அன்று, போக்குவரத்து நிறுத்தப்பட்டு விடும். அந்நாட்டு மக்கள் தேவாலயங்களுக்குச் செல்ல சறுக்கு வண்டியைப் பயன்படுத்துகிறார்கள். அதே போன்று அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகையன்று மக்கள் மின்னல் வேகத்தில் தங்கள் வாகனங் களை ஓட்டுவது வழக்கம். அவ்வாறு விதிகளை மீறும் வாகனங்களின் மீது போலீசார் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளை ஒட்டி அனுப்புகிறார்கள்.

கிறிஸ்துமஸ் சண்டை

பெரு நாட்டில் கிறிஸ்துமஸை வித்தியாசமாக கொண்டாடுகிறார்கள். எப்படி என்கிறீர்களா?.. ஒவ்வொரு ஆண்டும் பெருவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் பெண்களுக்கான கை சண்டையாக மாறிவிடுகிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என கூடியிருக்கும் மக்கள், கூட்டத்தில் யாரை வேண்டு  மானாலும் சண்டைக்கு அழைத்து கைகளால் மோதிக்கொள்ளலாம். இதன்மூலம் சண்டை–சச்சரவுகளை மறந்து அடுத்த ஆண்டில் அடியெடுத்து வைக்க முடியும் என்ற நம்பிக்கை பெருவில் பின்பற்றப்படுகிறது.

பனி மனிதன்

அலாஸ்கா மக்கள் கிறிஸ்துமஸை ‘ஸ்னோசில்லா’ என்ற பனி மனிதனோடு கொண்டாடுகிறார் கள். கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு கிடைக்கும் மவுசு, இந்த பனி மனிதனுக்கும் கிடைக்கிறது. பனிக்கட்டிகளால் பிரமாண்டமாக உருவாக்கப்படும் பனி மனிதனுக்கு தொப்பி, மப்லர், கை உறை போன்றவற்றை அணிவித்து கிறிஸ்துமஸை கொண்டாட்டாடுகிறார்கள்.

நாயின் பாசம்

கியா என்ற நாய்க்கு, கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மைகள் என்றால் கொள்ளை பிரியமாம். கிறிஸ்துமஸ் மரத்தில் தொங்க விடப்பட்டிருக்கும் சாண்டா கிளாஸ் பொம்மைகளை தேடி தேடி எடுத்து விளையாடுமாம். வாஞ்சையோடு கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மைகளை முத்தம் கொடுத்து விளையாட, கியாவின் உரிமையாளர் நிஜ கிறிஸ்துமஸ் தாத்தாவையே வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார். நிஜ கிறிஸ்துமஸ் தாத்தாவை பார்த்ததும் கியாவிற்கு அப்படி ஒரு சந்தோஷமாம். அதிலிருந்து வருட வருடம் சாண்டா கிளாஸ், கியாவை சந்தித்து பரிசு பொம்மைகளை கொடுக்க தவறுவதில்லை.

கிறிஸ்துமஸ் பரிசு

கன்சாஸ் நகரத்தில் ரகசியமான கிறிஸ்துமஸ் தாத்தா உலா வருகிறார். ஏழை எளிய மக்களை குறிவைக்கும் இந்த கிறிஸ்துமஸ் தாத்தா, அவர் களுக்கு தேவையான பண உதவியையும், பொருள் உதவியையும் தக்க சமயத்தில் செய்து கொடுப்பாராம். 2014–ம் ஆண்டு வரை பல அமைப்புகளின் உதவியோடு ரகசியமாக பரிசு பொருட்களை வழங்கி வந்தவர், தற்போது நேரடியாகவே களத்தில் இறங்கிவிட்டார். சமீபத்தில் கூட 1 லட்சம் டாலர்களை போலீசாரிடம் கொடுத்து ஏழை எளிய மக்களுக்கு பிரித்து கொடுக்கச் சொல்லியிருக்கிறார்.

Next Story