திருப்பத்தூரில் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


திருப்பத்தூரில் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Dec 2016 2:45 AM IST (Updated: 22 Dec 2016 7:38 PM IST)
t-max-icont-min-icon

அஞ்சல் ஊழியர்களுக்கு 7–வது ஊதிய குழு பரிந்துரையின்படி விரைவில் ஊதியம் வழங்கக்கோரி அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் திருப்பத்தூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்ட தலைவர் எஸ்.தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். வாதாபி வரவ

திருப்பத்தூர்,

அஞ்சல் ஊழியர்களுக்கு 7–வது ஊதிய குழு பரிந்துரையின்படி விரைவில் ஊதியம் வழங்கக்கோரி அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் திருப்பத்தூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்ட தலைவர் எஸ்.தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். வாதாபி வரவேற்றார். இளங்கோ, காளிமுத்து, சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோட்ட செயலாளர் எம்.மனோகரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் கோவிந்தசாமி, மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கணேசன் நன்றி கூறினார்..


Next Story