ஆசனாம்பட்டு ஊராட்சியில் சிறப்பு மனுநீதிநாள் முகாமில் 103 பேருக்கு நலத்திட்ட உதவிகள் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்
ஆம்பூர் தாலுகா ஆசனாம்பட்டு ஊராட்சியில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். தாசில்தார் ரூபிபாய் முன்னிலை வகித்தார். சமூக பாதுகாப்பு தாசில்தார் மணிலா வரவேற்றார். ஆர்.பாலசுப்பிரமணி எம்.எல்.ஏ கலந்து கொண்டு ப
ஆம்பூர்,
ஆம்பூர் தாலுகா ஆசனாம்பட்டு ஊராட்சியில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். தாசில்தார் ரூபிபாய் முன்னிலை வகித்தார். சமூக பாதுகாப்பு தாசில்தார் மணிலா வரவேற்றார். ஆர்.பாலசுப்பிரமணி எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசினார்.
முகாமில் 262 மனுக்கள் பெறப்பட்டு, 101 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மற்ற மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதையடுத்து முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் அட்டை, தையல்எந்திரம் என 103 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் வழங்கினார்.
முகாமில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜோதிராமலிங்கராஜா, கூட்டுறவு சங்க தலைவர் ஆர்.வெங்கடேசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அன்பரசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜெய்சங்கர், வருவாய் ஆய்வாளர் சசிகலா, பாரதி, கிராம நிர்வாக அலுவலர்கள் பிரிவிதா, வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.