புவனகிரி அருகே அரசு பஸ்சை வழிமறித்து டிரைவர் மீது தாக்குதல் 4 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு


புவனகிரி அருகே அரசு பஸ்சை வழிமறித்து டிரைவர் மீது தாக்குதல் 4 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 23 Dec 2016 4:30 AM IST (Updated: 22 Dec 2016 8:24 PM IST)
t-max-icont-min-icon

புவனகிரி அருகே அரசு பஸ்சை வழிமறித்து டிரைவரை தாக்கிய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 4 பேர் கும்பல் கம்மாபுரம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன் மகன் கணேசன் (வயது48), அரசு பஸ் டிரைவர். இவர் நேற்று முன்தினம் மாலை சிதம்பரம்

பரங்கிப்பேட்டை,

புவனகிரி அருகே அரசு பஸ்சை வழிமறித்து டிரைவரை தாக்கிய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

4 பேர் கும்பல்

கம்மாபுரம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன் மகன் கணேசன் (வயது48), அரசு பஸ் டிரைவர். இவர் நேற்று முன்தினம் மாலை சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து 30–க்கும் மேற்பட்ட பயணிகளை பஸ்சில் ஏற்றிக்கொண்டு சேத்தியாத்தோப்பு வழியாக விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது புவனகிரி அடுத்த மஞ்சக்கொல்லையில் உள்ள மதுபானக் கடை அருகே வந்த போது அங்கு சாலையில் நடுவே 4 பேர் கொண்ட மர்ம கும்பல் நின்று கொண்டிருந்தது. இதை பார்த்த கணேசன் பஸ்சை மெதுவாக இயக்கியபடி அவர்கள் 4 பேரையும் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு சத்தம் போட்டதாக கூறப்படுகிறது.

போலீஸ் வலைவீச்சு

இதில் ஆத்திரமடைந்த அந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் பஸ்சை வழிமறித்து டிரைவர் கணேசனை சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து கணேசன் மருதூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) இளவரசன் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ்சை வழிமறித்து டிரைவரை தாக்கிய மர்ம கும்பலை சேர்ந்தவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story