தேனி மாவட்டத்தில் அனுமதி பெறாமல் செங்கல் சூளை நடத்தினால் அபராதம் கலெக்டர் எச்சரிக்கை
தேனி மாவட்டத்தில் அனுமதி பெறாமல் செங்கல் சூளை நடத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் வெங்கடாசலம் எச்சரித்துள்ளார். செங்கல் சூளை அனுமதி தேனி மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:– நாட்டு செங்கல் சூள
தேனி,
தேனி மாவட்டத்தில் அனுமதி பெறாமல் செங்கல் சூளை நடத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் வெங்கடாசலம் எச்சரித்துள்ளார்.
செங்கல் சூளை அனுமதிதேனி மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:–
நாட்டு செங்கல் சூளை மற்றும் சேம்பர் செங்கல் தயாரிப்பு தொழில் நடத்துவோர் அதற்கு பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். பதிவு சான்று பெறுவதற்கு செங்கல் சூளை அல்லது சேம்பர் இயங்கி வரும் இடம், செங்கல் தயாரிக்க தேவையான மண் எடுக்கப்படும் இடத்திற்கான கிராம ஆவண நகல்களான சிட்டா, அடங்கல், அ–பதிவேடு மற்றும் புல வரைபட நகல்களுடன் மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் பதிவு கட்டணமாக நாட்டு செங்கல் காளவாசலுக்கு ரூ.100, சேம்பருக்கு ரூ.1,000 செலுத்த வேண்டும்.
பதிவு சான்று பெற்றவுடன் மண் எடுக்க விண்ணப்ப கட்டணம் ரூ.1,500 மற்றும் வருடாந்திர செங்கல் கனிமத் தொகையாக ஒரு ஆண்டுக்கு நாட்டு செங்கல் சூளைக்கு ரூ.6 ஆயிரம், சேம்பர் செங்கலுக்கு ரூ.35 ஆயிரம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின்னர் அனுமதி வழங்கப்படும்.
அபராதம்நாட்டு செங்கல் சூளை மற்றும் சேம்பர் நடத்துவதற்கு அனுமதி பெறாத நபர்கள் உடனடியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தேவையான விவரங்களை பெற்றுக் கொள்ளலாம். வருகிற ஜனவரி மாதம் 2–வது வார இறுதிக்குள் அனுமதி பெறாமலும், அனுமதி பெற விண்ணப்பம் அளிக்காமலும் செங்கல் சூளை, சேம்பர் நடத்துவோர் மீது 1959–ம் ஆண்டு தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் செங்கல் தயாரிப்பு இடத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள மண்ணின் அளவுக்கு ஏற்ப அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.