புத்தாண்டு தினத்தன்று விபத்துகள் நடப்பதை தடுக்க 22 இடங்களில் பாதுகாப்பு மையம் பொதுமக்களை தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை


புத்தாண்டு தினத்தன்று விபத்துகள் நடப்பதை தடுக்க 22 இடங்களில் பாதுகாப்பு மையம் பொதுமக்களை தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 23 Dec 2016 4:00 AM IST (Updated: 22 Dec 2016 10:37 PM IST)
t-max-icont-min-icon

கோவை, கோவை மாநகர பகுதியில் புத்தாண்டு தினத்தன்று விபத்துகள் நடப்பதை தடுக்க 22 இடங்களில் பாதுகாப்பு மையம் அமைக்கப்படுகிறது. பொதுமக்களை தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர். முக்கிய ரோடுகள்

கோவை,

கோவை மாநகர பகுதியில் புத்தாண்டு தினத்தன்று விபத்துகள் நடப்பதை தடுக்க 22 இடங்களில் பாதுகாப்பு மையம் அமைக்கப்படுகிறது. பொதுமக்களை தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.

முக்கிய ரோடுகள்

கோவை மாநகர பகுதியில் அவினாசி ரோடு, திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, சத்தி ரோடு ஆகிய ரோடுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். இந்த ரோடுகளில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காதது, குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவது உள்ளிட்ட காரணங்களுக்காக அடிக்கடி விபத்து நடந்து வருகிறது.

அதுபோன்று ரோட்டின் ஓரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துவதால், ஆங்காங்கே அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகனங்களில் செல் பவர்களுக்கு பெரிதும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

விபத்துகளை தடுக்க நடவடிக்கை

மேலும் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டையொட்டி டிசம்பர் 31-ந் தேதி இரவு 10 மணிக்கு மேல் கோவை-அவினாசி ரோட்டில் இளைஞர்கள் குடித்துவிட்டு அதிவேகத்தில் வாகனங்களை ஓட்டுவதால் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் அதுபோன்று விபத்துகள் ஏற்படுவதை தடுக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதற்காக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.அமல்ராஜ் உத்தரவின்பேரில் துணை கமிஷனர்கள் லட்சுமி, சரவணன் ஆகியோர் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் மாநகர பகுதியில் உள்ள நட்சத்திர விடுதி உரிமையாளர்களுடனும் ஆலோசனை நடத்தப்பட்டது.

புத்தாண்டு தினத்தில் நடைபெறும் விபத்துகளை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

22 இடங்களில் பாதுகாப்பு மையம்

புத்தாண்டு தினம் பிறந்ததும், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் ரோடுகளில் எழுதுவது, கார்கள், இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக சென்று புத்தாண்டு வாழ்த்துக்களை கூறுவது போன்ற செயல்களால்தான் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. இதில் ஒருசிலர் குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவதால் அவர்கள் கீழே விழுவதுடன், மற்றவர்களையும் விபத்துக்குள்ளாக்கி விடுகிறார்கள்.

இதை தடுக்க, வருகிற 31-ந் தேதி இரவு கோவையின் முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்படுவதுடன், 22 இடங்களில் ரோட்டின் ஓரத்தில் பாதுகாப்பு மையம் அமைத்து அங்கு, போலீசார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

அறிவுரை வழங்குவார்கள்

வாகனங்களில் அதிவேகமாக செல்பவர்கள், குடிபோதையில் வாகனங்களை ஓட்டி வருபவர்களை பிடித்து அந்த பாதுகாப்பு மையத்தில் அமர வைக்கப்படுவார்கள். போலீசார் அவர்களுக்கு போதிய அறிவுரைகளை வழங்கி அனுப்பி வைப்பார்கள்.

குடிபோதையில் உள்ளவர்களுக்கு போதை தெளிந்த பின்னரே வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். புத்தாண்டு அன்று விபத்து நடக்கக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. எனவே புத்தாண்டு தினத்தன்று வாழ்த்து கூறுகிறோம் என்பதற்காக பொதுமக்களை தொந்தரவு செய்வது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story