சென்னையில் இருந்து செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி நடப்பதாக கடிதம் எழுதியவர் கைது

சென்னையில் இருந்து செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி நடப்பதாக கடிதம் எழுதியவர் கைது
x
தினத்தந்தி 23 Dec 2016 3:45 AM IST (Updated: 22 Dec 2016 10:49 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய மேலாளருக்கு நேற்று முன்தினம் வந்த மர்ம கடிதத்தில், ‘‘வருகிற 24–ந்தேதி சென்னை எழும்பூரில் இருந்து வரும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி நடக்கிறது. இது இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட சவால் ஆகும்’’ என குறிப்பிட்டு இருந்தது.

இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், அந்த கடிதத்தை பாளையங்கேர்ட்டை மனக்காவலம்பிள்ளை நகர் பகுதியில் உள்ள கோட்டூரை சேர்ந்த பீர்முகைதீன்(வயது 53) என்ற கட்டிட தொழிலாளி எழுதியது தெரியவந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் அவர் இதுபோல் ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு மிரட்டல் கடிதம் அனுப்பியது தெரிய வந்தது. அந்த கடிதத்தில் போலியான முகவரி இருந்தது. அதனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் இந்த முறை எழுதிய கடிதத்தில் தனது உண்மையான இருப்பிட விலாசத்தை குறிப்பிட்டு இருந்ததால் அவரை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர்.

Next Story