கடலூர்-பட்டாம்பாக்கம் இடையேயான சுங்கச்சாலையை தரமாக அமைக்க வேண்டும் ஒப்பந்ததாரரிடம் கலெக்டர் அறிவுறுத்தல்
கடலூர், கடலூர் செம்மண்டலம்-பட்டாம்பாக்கம் இடையேயான சுங்கச்சாலையை தரமாக அமைக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரரிடம் கலெக்டர் ராஜேஷ் அறிவுறுத்தினார். ககன்தீப்சிங் பேடி கடலூர் மாவட்ட கண்
கடலூர்,
கடலூர் செம்மண்டலம்-பட்டாம்பாக்கம் இடையேயான சுங்கச்சாலையை தரமாக அமைக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரரிடம் கலெக்டர் ராஜேஷ் அறிவுறுத்தினார்.
ககன்தீப்சிங் பேடி
கடலூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியான ககன்தீப்சிங்பேடி சமீபத்தில் கடலூர் மாவட்டத்துக்கு வந்திருந்த போது கடலூர் செம்மண்டலம்-பட்டாம்பாக்கம் இடையே அமைக்கப்பட்டு வரும் சுங்கச்சாலையை பார்வையிட்டார். சுங்கச்சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டு வருவதைக்கண்ட அவர், சுங்கச்சாலையை தரமாக அமைக்காவிட்டால் ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
இந்த நிலையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய வளர்ச்சிப்பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் டி.பி.ராஜேஷ் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கலெக்டரும் அறிவுறுத்தல்
இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ராஜேஷ், ரூ.17.70 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் கடலூர் செம்மண்டலம் முதல் பட்டாம்பாக்கம் வரையிலான 15.5 கிலோமீட்டர் சுங்கச்சாலை அமைக்கும் பணியின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், சுங்கச்சாலை அமைக்கும் பணியின் தரத்தில் எவ்வித குறைபாடும் இல்லாமலும், குறித்த நேரத்தில் விரைந்து முடிக்கவும் அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார். மேலும் பாராளுமன்ற உறுப்பினர் சிறப்பு நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கோண்டூர் மற்றும் நத்தப்பட்டு ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட வடிகால் பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார். வடிகால்கள் முறையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்யுமாறு அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
உயர்மட்ட பாலம்
அதேபோல் குமராட்சியில் வெள்ளியங்கால் ஓடையின் குறுக்கே ரூ.2.50 கோடி மதிப்பீட்டிலும், பரங்கிப்பேட்டை பாசிமுத்தான் ஓடையின் குறுக்கே ரூ.1.46 கோடி மதிப்பீட்டிலும் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலப்பணிகளை விரைந்து முடிக்குமாறும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் எஸ்.எஸ்.குமார், உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story