சிறுகனூர் அருகே லாரி மீது வேன் மோதல் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 6 பேர் படுகாயம்

சமயபுரம்,
சிறுகனூர் அருகே லாரி மீது வேன் மோதியதில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள்
புதுச்சேரியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு மெக்கானிக்கல் படிக்கும் 16 மாணவர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதற்காக அங்கிருந்து வேன் மூலம் புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை அந்த வேன் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொணலை அருகே வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் வேனில் பயணம் செய்த புதுச்சேரி ஜே.ஜே. நகரை சேர்ந்த அந்தோணிசாமி மகன் அருண்ராஜ்(வயது20), அதே பகுதியை சேர்ந்த வேலு மகன் விஸ்வநாதன்(18), கருவாடிக்குப்பம் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு மகன் புவியரசன்(19), ராமநாதபுரம் அருகே உள்ள தொண்டமாநத்தம் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் மணிமாறன்(21), புதுக்கோட்டை அருகே உள்ள கந்தபுதுக்குப்பம் பகுதியை சேர்ந்த சேகர் மகன் விமல்(19), திருச்சி பாலமேட்டுப்பட்டியை சேர்ந்த ரவி மகன் தினேஷ்(20) ஆகிய 6 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
வேன் டிரைவர் தப்பி ஓட்டம்
அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு இருங்களூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் புவியரசன் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் 10 மாணவர்கள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து ஏற்பட்டவுடன் வேனை ஓட்டி வந்த டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
இந்த விபத்து குறித்து சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, கீதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story