கல்லக்குடி அய்யப்பன் கோவிலில் சாமி திருவீதியுலா

கல்லக்குடி,
திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் அன்னதானபிரபு அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வார்கள். அதேபோல இந்த ஆண்டும் கார்த்திகை மாதம் 1-ந் தேதி பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். அவர்கள் தினமும் கோவிலில் நடைபெறும் பஜனை மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனையில் கலந்து கொண்டு வருகின்றனர். நேற்று காலை 5 மணிக்கு மஹாகணபதி ஹோமமும், 9 மணிக்கு அய்யப்பனுக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றன. பின்னர் அன்னதானம் நடைபெற்றது. இரவு 7 மணியளவில் நாதஸ்வர கச்சேரி மற்றும் வாண வேடிக்கையுடன் அய்யப்பன் திருவீதியுலா நடைபெற்றது. இதில் அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story