திருமயம் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் தென்னக ரெயில்வே பொது மேலாளரிடம் பொதுமக்கள் மனு


திருமயம் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் தென்னக ரெயில்வே பொது மேலாளரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 23 Dec 2016 4:15 AM IST (Updated: 23 Dec 2016 2:18 AM IST)
t-max-icont-min-icon

திருமயம் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் தென்னக ரெயில்வே பொது மேலாளரிடம் பொதுமக்கள் மனு

புதுக்கோட்டை,

திருமயம் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்னக ரெயில்வே பொதுமேலாளர் வசிஷ்டஜோரியிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

ரெயில்வே பொது மேலாளர் ஆய்வு

புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் தென்னக ரெயில்வே பொது மேலாளர் வசிஷ்டஜோரி தலைமையில் ரெயில்வே அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை பார்வையிட்டனர்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தென்னக ரெயில்வே பகுதிகளில் உள்ள 700 லெவல் கிராசிங்குகள் அனைத்தும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் மூடப்பட்டு, சப்-வேயாக மாற்றப்படும். தென்னக ரெயில்வே சார்பில் பல்வேறு பகுதிகளில் இருந்து சபரிமலைக்கு 190 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. ரெயில்வே பாதுகாப்பை பொறுத்தவரை தற்போது தென்னக ரெயில்வேயில் ரெயில் நிலையங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதற்காக ரூ.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த பணிகள் அடுத்த ஆண்டிற்குள் முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை

பின்னர் சிவகங்கை எம்.பி. செந்தில்நாதன், அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரெத்தினசபாபதி ஆகியோர் பொது மேலாளர் வசிஷ்டஜோரியிடம் அறந்தாங்கி பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருநெல்வேலி, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செங்கல்பட்டு வரை இயக்கப்படும் சிறப்பு ரெயிலை தினமும் இயக்க வேண்டும். திருமயம் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 கோரிக்கைகள் அடங்கிய மனுவை வசிஷ்டஜோரியிடம் அளித்தனர்.

இதைப்போல கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ ஆறுமுகம், நார்த்தாமலையில் ரெயில்கள் நிற்காமல் சென்று வருகிறது. இதனால் கூலி தொழிலாளர்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர். எனவே அனைத்து ரெயில்கள் நார்த்தாமலையில் நின்று செல்வதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனு கொடுத்தார்.

சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில்

ரெயில் பயணிகள் சங்கத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை தினமும் இயக்க வேண்டும். விருதுநகர் மானாமதுரை இடையே ரெயில் பாதை பணிகள் முடிந்து உள்ளதால் திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி செல்லும் அனைத்து ரெயில்களும் காரைக்குடி மார்க்கத்தில் இயக்க வேண்டும். ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சியில் இயக்கப்படுவதை காரைக்குடியில் இருந்து இயக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

திமுக சார்பில் நகர செயலாளர் நைனாமுகமது தலைமையில் தி.மு.க.வினர் கொடுத்த மனுவில், புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூருக்கு ரெயில் பாதை அமைக்க வேண்டும். திருச்சி, திருவனந்தபுரம், திருச்செந்தூர் பகுதிகளுக்கு புதுக்கோட்டை, காரைக்குடி வழியாக ரெயில்கள் இயக்க வேண்டும். சென்னைக்கு பகல் நேரத்தில் ரெயில்கள் இயக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

Next Story