செருகளத்தூரில் போலியான குடும்ப அட்டைகள் இருக்கிறதா? கலெக்டர் நிர்மல்ராஜ் திடீர் ஆய்வு


செருகளத்தூரில் போலியான குடும்ப அட்டைகள் இருக்கிறதா? கலெக்டர் நிர்மல்ராஜ் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 23 Dec 2016 4:15 AM IST (Updated: 23 Dec 2016 2:20 AM IST)
t-max-icont-min-icon

செருகளத்தூரில் போலியான குடும்ப அட்டைகள் இருக்கிறதா? கலெக்டர் நிர்மல்ராஜ் திடீர் ஆய்வு

குடவாசல்,

குடவாசல் அருகே உள்ள செருகளத்தூரில் போலியான குடும்ப அட்டைகள் இருக்கிறதா? என்று வீடு, வீடாக சென்று மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் ஆய்வு செய்தார்.

ஆய்வு பணி

தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைகளை ஆய்வு செய்து போலி குடும்ப அட்டை இருக்கிறதா? சொந்த ஊரில் வசிக்கிறார்களா? வெளி நாட்டுக்கு சென்றவர்களின் பெயர் குடும்ப அட்டையில் உள்ளதா? அட்டையில் உள்ளவர்களின் பெயருக்கு ஆதார் அட்டை உள்ளதா? அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்கள் வாங்க தகுதி உள்ளவர்களா? அரசு பணியில் உள்ளவர்களா? மாடி வீடா? கூரை வீடா? சம்பாதிக்கும் நபர்கள் எத்தனை பேர் உள்ளனர்? முதியோர் உதவித்தொகை பெறுகிறார்களா? என்ற ஆய்வு பணி நடந்து வருகிறது.

அதன்படி செருகளத்தூர் கிராமத்தில் உள்ள 1,448 குடும்ப அட்டையின் ஆய்வு பணியை மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் நேற்றுமுன்தினம் திடீரென ஆய்வு மேற்கொண்டார். இதேபோல குடவாசலில் இயங்கி வரும் திருவாரூர் கூட்டுறவு விற்பனை பண்டக சாலை கண்காணிப்பில் இயங்கும் ரேஷன்கடையில் உள்ள 1,615 ரேஷன் கார்டுகளை ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் மோகன்ராஜ், உதவி கலெக்டர் முத்துமீனாட்சி, மாவட்ட வழங்கல் அலுவலர் இருதயராஜ், தாசில்தார் தங்கமணி, வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story