கோவில்பட்டி தினசரி மார்க்கெட் கடைகளுக்கு சந்தை நிலவரப்படி வாடகை நிர்ணயம் நகரசபையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு


கோவில்பட்டி தினசரி மார்க்கெட் கடைகளுக்கு சந்தை நிலவரப்படி வாடகை நிர்ணயம் நகரசபையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 23 Dec 2016 4:15 AM IST (Updated: 23 Dec 2016 2:22 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி தினசரி மார்க்கெட் கடைகளுக்கு சந்தை நிலவரப்படி வாடகை நிர்ணயம் நகரசபையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு

கோவில்பட்டி,

கோவில்பட்டி நகரசபையில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், தினசரி மார்க்கெட் கடைகளுக்கு சந்தை நிலவரப்படி வாடகை நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

ஆலோசனை கூட்டம்


கோவில்பட்டி நகரசபை பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம், நகரசபை கூட்ட அரங்கில் நேற்று மாலையில் நடந்தது. நகரசபை ஆணையாளர் சர்தார் தலைமை தாங்கினார். தாசில்தார் ராஜ்குமார் தங்கசீலன் முன்னிலை வகித்தார்.

நகரசபை என்ஜினீயர் சுப்புலட்சுமி, வருவாய் அதிகாரி வெங்கடாசலபதி, சுகாதார அதிகாரி ஸ்டான்லி குமார், தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் முத்துராஜ், செயலாளர் நீதிராஜன், பொருளாளர் அய்யாத்துரை, முன்னாள் தலைவர் ரவீந்திர ராஜன், கண்ணன், தொழில் வர்த்தக சங்க தலைவர் பழனிசெல்வம், பொருளாளர் சுரேஷ்குமார், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:–

வாடகை நிர்ணயம்


கோவில்பட்டி நகரசபை தினசரி மார்க்கெட்டில் உள்ள கடைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அளவீடு செய்து, சந்தை நிலவரப்படி மாத வாடகை நிர்ணயம் செய்வது, 12 மாத வாடகையை கடைக்காரர்கள் வைப்புத்தொகையாக செலுத்துவது, மதுரை ஐகோர்ட்டில் வியாபாரிகள் தொடர்ந்த வழக்குகளை வாபஸ் பெறுவது, தினசரி மார்க்கெட்டில் 11 கடைக்காரர்கள் தங்களது பெயரில் வாங்கிய மின் இணைப்புகளை நகரசபை பெயருக்கு மாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதனை அனைவரும் ஏற்று கொண்டனர்.

Next Story