சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி அரசு விரைவு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்,
சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு கோர்ட்டு உத்தரவுப்படி நாளுக்கு ரூ.629 சம்பளம் வழங்க வேண்டும், பழைய பஸ்களை மாற்ற வேண்டும், 1,200 தொழிலாளர்கள் நியமனம் செய்ய வேண்டும், தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தத்தை பேசி முடிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு விரைவு போக்குவரத்துக்கழக ஊழியர் சங்கம் சார்பில் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பணிமனை அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு பகவதியப்பன் தலைமை தாங்கினார். பணிமனை செயலாளர் ஜான்ராஜன், மத்திய சங்க துணைபொதுச்செயலாளர் பொன்.சோபனராஜ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் ஆதிலிங்கம், செல்லசாமி, மணிகண்டன், மனோகரன், அகஸ்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story