பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தஞ்சையில் மண்பானை, அடுப்புகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்

தஞ்சாவூர்,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தஞ்சையில் மண்பானை, அடுப்புகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பொங்கல் பண்டிகை
வருகிற ஜனவரி மாதம் 14-ந்தேதி தமிழர்களின் திருநாளாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை 4 நாட்கள் கொண்டாடப்படும். அதாவது தைமாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகையும், பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகி பண்டிகையும் கொண்டாடப் படும். பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கலும், அதற்கு அடுத்த நாள் காணும்பொங்கலும் கொண்டாடப் படும்.
பொங்கல் பண்டிகை அன்று உழவர்கள் அதிகாலையில் குளித்துவிட்டு புத்தாடை அணிந்து வீடுகளில் மண்பானையில் புதுஅரிசியில் பொங்கலிட்டு கதிரவனுக்கு படைத்து வழிபடுவார்கள். இதே போல் மாட்டுப்பொங்கல் அன்று மாடுகளை குளிப்பாட்டி, அலங்கரித்து மாட்டு தொழுவத்தில் பொங்கலிட்டு வழிபடுவார்கள்.
மண்பானை, அடுப்புகள்
இதற்காக உழவர்கள் பொங்கலிடுவதற்காக புதிய மண்பானைகள் மற்றும் புதிய மண் அடுப்புகள் போன்றவற்றை வாங்குவார்கள். தற்போது பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 22 நாட்கள் இருப்பதால் தற்போது மண்பானைகள், மண் அடுப்புகள் தயாரிக்கும் பணிகள் தஞ்சையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள குயவர்தெருவில் 15-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த மண்பானை, மண் அடுப்புகள் உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பகுதியில் முன்பு சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வந்தனர். தற்போது இதில் போதிய வருமானம் இல்லாததால் பலர் வேறு தொழிலை நாடி சென்று விட்டனர். தற்போது 15 குடும்பத்தினர் இந்த தொழிலை பாரம்பரியமாக செய்து வருகிறார்கள்.
தயாரிப்பு பணி தீவிரம்
தற்போது மண்பானைகள் மற்றும் மண்அடுப்புகள் அதிக அளவில் தயார் செய்யப்படுவதால் ஒவ்வொரு வீடுகள் முன்பும் அடுப்புகளை தயார் செய்து வெயிலில் காய வைத்த வண்ணம் உள்ளனர். இதேபோல் மண்பானைகளையும் தயார் செய்து அதனை ஒழுங்குபடுத்தி காய வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த அடுப்புகள் மற்றும் மண்பானைகள் இன்னும் ஓரிரு நாளில் சுட வைத்து விற்பனைக்கு அனுப்பப்பட உள்ளது.
வழக்கமாக அடுப்பு வகைகளில் 3 வகைப்படும். அவை ஒத்தை அடுப்பு, இரட்டை அடுப்பு, தூள்அடுப்பு ஆகும். இதில் பொங்கல் பண்டிகைக்காக ஒத்தை அடுப்பு அதிக அளவில் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இந்த வகை அடுப்புகள் தயார் செய்யப்பட்டு ரூ.50-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. கடைகளில் ரூ.80 வரை அடுப்புகளை விற்கிறார்கள். இதே போல் மண்பானை ரூ.30 முதல் ரூ.300 வரையிலான பானைகளை தயார் செய்கிறார்கள். தஞ்சையில் தயார் செய்யப்படும் பானைகள், அடுப்புகள் தஞ்சை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், மன்னார்குடி போன்ற இடத்திற்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
சலுகை அளிக்க வேண்டும்
இதுகுறித்து மண்பானை தொழிலாளி சுப்பிரமணியன் கூறுகையில்,
பொங்கல் பண்டிகைக்காக மண்பானை, அடுப்புகள் அதிக அளவில் தயார் செய்து வருகிறோம். தற்போது மண்பானை, அடுப்புகள் செய்வதற்கு மண் கிடைப்பது என்பது அரிதாக உள்ளது. எனவே எங்கள் தொழில் மேன்மை அடைய மண் எடுப்பதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும். நெசவாளர்களுக்கு மின்சார கட்டண சலுகை வழங்குவது போல மண்பாண்ட பொருட்கள் தயார் செய்யும் எங்களுக்கும் மின்சார கட்டண சலுகை அரசு வழங்க வேண்டும். அப்போது தான் இந்த தொழில் அழியாமல் பாதுகாக்கப்படும் என்று தெரிவித்தார்.

Next Story