தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்


தடை செய்யப்பட்ட  புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்
x
தினத்தந்தி 24 Dec 2016 4:15 AM IST (Updated: 23 Dec 2016 6:26 PM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வு சிங்கம்புணரி பேரூராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலையம், பெரிய கடைவீதி மற்றும் காரைக்குடி–திண்டுக்கல் சாலையில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொர

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஆய்வு

சிங்கம்புணரி பேரூராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலையம், பெரிய கடைவீதி மற்றும் காரைக்குடி–திண்டுக்கல் சாலையில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா என மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் உத்தரவின் பேரில் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் அருள்மணி தலைமையிலும், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சாத்தன் முன்னிலையிலும் சுகாதார ஆய்வாளர்கள் ஜோதிபாசு, ரமேஷ், கிருஷ்ணன், கருப்பசாமி கொண்ட குழுவினருடன் சிங்கம்புணரி போலீசார் உதவியுடன் உதவியுடன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இவர்களுடன் பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவும் பொது இடங்கள் மற்றும் கடைகளில் ஆய்வு செய்தனர்.

எச்சரிக்கை

இந்த ஆய்வின்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்த கடைகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோன்று பொது இடங்களில் புகை பிடித்தவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டது. இதனையடுத்து கடைகளில் பறிமுதல் செய்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன. அனைத்து கடைகளிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும், புகையிலை குறித்து எச்சரிக்கை வாசகங்கள் கொண்ட விளம்பர பலகை வைக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும் இதேபோல் மீண்டும் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்க கூடாது என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story