சிங்கம்புணரி பேருந்து நிலையத்தில் பஸ்களை மறித்து போராட்டம்; பயணிகள் தவிப்பு
சிங்கம்புணரி பஸ் நிலையத்தில் அடிக்கடி பஸ்களை முறையாக நிறுத்தவில்லை என்று தனியார் பற்றும் அரசு பஸ்களின் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஒருவரையொருவர் குறை கூறியும் வருகின்றனர். இந்தநிலையில் நேற்று காலை நத்தம் செல்லும் அரசு பஸ்சை நிறுத்துவதற்கு இடம் இல்லாமல் இருந்
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி பஸ் நிலையத்தில் அடிக்கடி பஸ்களை முறையாக நிறுத்தவில்லை என்று தனியார் பற்றும் அரசு பஸ்களின் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஒருவரையொருவர் குறை கூறியும் வருகின்றனர். இந்தநிலையில் நேற்று காலை நத்தம் செல்லும் அரசு பஸ்சை நிறுத்துவதற்கு இடம் இல்லாமல் இருந்தது. இதனால் அந்த பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டர், தனியார் பஸ்களை முறையாக நிறுத்தாததால் தான் பஸ்சை நிறுத்த முடியவில்லை என்று கூறினர். மேலும் தனியார் பஸ்கள் முறையாக நிறுத்தாததை கண்டித்து பஸ் நிலையத்தின் உள்ளே மற்ற பஸ்கள் செல்லாத வகையில் மறித்து அரசு பஸ்சை நிறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதனால் பஸ் நிலையத்தில் நின்றிருந்த மற்ற பஸ்களின் ஒட்டுனர்களும், பொதுமக்களுக்கு அவதி அடைந்தனர்.
இதனால் பஸ்களின் டிரைவர்–கண்டக்டர்களுக்கு இடையே தகறாறு ஏற்பட்டது. இதுகுறித்த தகவலறிந்து அங்கு வந்த சிங்கம்புணரி போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து பஸ்களை மறித்து நிறுத்தப்பட்டிருந்த அரசு பஸ் எடுக்கப்பட்டு, பஸ்கள் இயக்கப்பட்டன. பொதுமக்கள் கூறும்போது, தனியார் மற்றும் அரசு பஸ்களை முறையாக நிறுத்தினால் பயணிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும், எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் சிங்கம்புணரி பஸ் நிலையம் குறுகலாக இருப்பதால் பஸ்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று கூறினர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதேபோன்று ஒரு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.