அழகுமுத்துக்கோன் அறக்கட்டளை சார்பில் வெளிநாட்டில் இறந்தவரின் குடும்பத்துக்கு நிதி உதவி


அழகுமுத்துக்கோன் அறக்கட்டளை சார்பில் வெளிநாட்டில் இறந்தவரின் குடும்பத்துக்கு நிதி உதவி
x
தினத்தந்தி 24 Dec 2016 4:15 AM IST (Updated: 23 Dec 2016 6:35 PM IST)
t-max-icont-min-icon

மண்டபம் யூனியன் தேர்போகி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் சவுதி அரேபியா நாட்டில் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் அங்கு நடந்த ஒரு விபத்தில் கோவிந்தராஜ் இறந்து போனார். இதைதொடர்ந்து அவரது மனைவி ரேவதிக்கு, ராமநாதபுரம் மாவட்ட அழகுமுத்துக்கோன்

ராமநாதபுரம்,

மண்டபம் யூனியன் தேர்போகி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் சவுதி அரேபியா நாட்டில் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் அங்கு நடந்த ஒரு விபத்தில் கோவிந்தராஜ் இறந்து போனார். இதைதொடர்ந்து அவரது மனைவி ரேவதிக்கு, ராமநாதபுரம் மாவட்ட அழகுமுத்துக்கோன் அறக்கட்டளை சார்பில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது. இதனை அறக்கட்டளை தலைவர் மூர்த்தி, அமைப்பாளர் முருகன், நிர்வாகிகள் சேகர், ராஜா மற்றும் மகளிரணி நிர்வாகிகள் ஜெயக்கொடி, சந்திரப்பிரியா ஆகியோர் வழங்கினர்.


Next Story