நிதி நிறுவனம் வாகனத்தை எடுத்து சென்றதால் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை


நிதி நிறுவனம் வாகனத்தை எடுத்து சென்றதால் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 24 Dec 2016 4:00 AM IST (Updated: 23 Dec 2016 6:37 PM IST)
t-max-icont-min-icon

மதுரையை அடுத்த சமயநல்லூர் அருகே ஊர்மெச்சிகுளம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யாதுரை மகன் குமரன் (வயது 32). திருமணமாகாத இவர் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார். சமீபத்தில் இவரின் சகோதரர் நிதி நிறுவனம் மூலம் மாதாந்திர தவணை தொகை செலுத்தும் வகையில் ஒர

வாடிப்பட்டி,

மதுரையை அடுத்த சமயநல்லூர் அருகே ஊர்மெச்சிகுளம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யாதுரை மகன் குமரன் (வயது 32). திருமணமாகாத இவர் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார். சமீபத்தில் இவரின் சகோதரர் நிதி நிறுவனம் மூலம் மாதாந்திர தவணை தொகை செலுத்தும் வகையில் ஒரு மினி வேனை வாங்கி கொடுத்தார். அந்த வேனை குமரன் ஓட்டி வந்தார். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக மாதாந்திர தவணை தொகையை கட்ட முடியாமல் விட்டு விட்டாராம். இதனால் நிதி நிறுவனத்தினர் வேனை பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். இதனால் மனவேதனை அடைந்த குமரன் நேற்றுமுன்தினம் வீட்டில் தனது அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சமயநல்லூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பழனி விசாரணை செய்து வருகிறார்.


Next Story