பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கலப்பட வெல்லம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கலப்பட வெல்லம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை
x
தினத்தந்தி 24 Dec 2016 4:30 AM IST (Updated: 23 Dec 2016 6:51 PM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கலப்பட வெல்லம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வெல்லம் உற்பத்தி பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்துக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. இதையொட்டி வெல்லம

சேலம்,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கலப்பட வெல்லம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வெல்லம் உற்பத்தி

பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்துக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. இதையொட்டி வெல்லம் உற்பத்தி செய்யும் பணியில் அதன் உற்பத்தியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் காமலாபுரம், நாலுகால்பாலம், கருப்பூர், வெள்ளாளப்பட்டி, தும்பல், டேனிஷ்பேட்டை உள்ளிட்ட 300–க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

வெல்லத்தில் சிலர் சர்க்கரை கலப்பதாகவும், கலர் வருவதற்காக ரசாயனம் கலப்படம் செய்வதாகவும் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வருகிறது. அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வெல்ல உற்பத்தி செய்யப்படும் ஆலை மற்றும் வெல்ல மண்டிகளுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். அப்போது கலப்பட வெல்லத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கடும் நடவடிக்கை

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கலப்பட வெல்லம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா கூறியாவது:–

கரும்புச்சாறு மூலம்தான் வெல்லம் உற்பத்தி செய்ய வேண்டும். ஆனால் சிலர் தொடர்ந்து வெல்லத்தில் கலப்படம் செய்து விற்று வருகின்றனர். அவர்கள் சர்க்கரை மற்றும் ரசாயன பொருட்களை பயன்படுத்தி வெல்லத்தை உற்பத்தி செய்யக்கூடாது. கலப்பட வெல்லதால் மக்களுக்கு பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கலப்பட வெல்லம் தயாரிக்கும் உற்பத்தியாளர்கள் மற்றும் அதை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது உணவு பாதுகாப்புத்துறை சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆகையால் கலப்பட வெல்லத்தை யாரும் விற்பனை செய்யக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story