கார்த்திகை திருவிழா நிறைவு: 2,668 அடி உயர மலை உச்சியில் இருந்து மகாதீப கொப்பரை கீழே இறக்கப்பட்டது கோவிலில் பக்தர்கள் தரிசனம்
கார்த்திகை மகாதீப விழா நிறைவு பெற்றதை தொடர்ந்து 2,668 அடி உயர மலை உச்சியில் இருந்து மகாதீப கொப்ப கீழே இறக்கப்பட்டது. கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். கார்த்திகை தீபத்திருவிழா திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 3–
திருவண்ணாமலை
கார்த்திகை மகாதீப விழா நிறைவு பெற்றதை தொடர்ந்து 2,668 அடி உயர மலை உச்சியில் இருந்து மகாதீப கொப்ப கீழே இறக்கப்பட்டது. கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கார்த்திகை தீபத்திருவிழாதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 3–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வாக மகா தீபத்திருவிழா கடந்த 12–ந் தேதி கோலாகலமாக நடந்தது.
அப்போது 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. கொட்டும் மழையையும் பொருட்படுத்ததாது லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் சென்று தீப தரிசனம் செய்தனர். தீபத்திற்கு தேவையான நெய் தினமும் மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு தீபத்திற்கு பயன்படுத்தப்பட்டது. நேற்று முன்தினம் தீபத்திருவிழா நிறைவு பெற்றது.
கீழே இறக்கப்பட்டதுஇதையடுத்து நேற்று காலை மகா தீப கொப்பரை 2,668 அடி உயர மலை உச்சியில் இருந்து கீழே இறக்கப்பட்டது. பின்னர் கோவிலில் கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
அதைத்தொடர்ந்து மகா தீப கொப்பரை கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. இதனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.