ஒடுகத்தூர் வங்கியில் பணம் எடுக்க அதிகாலை முதலே நீண்ட வரிசை


ஒடுகத்தூர் வங்கியில் பணம் எடுக்க அதிகாலை முதலே நீண்ட வரிசை
x
தினத்தந்தி 24 Dec 2016 2:15 AM IST (Updated: 23 Dec 2016 7:48 PM IST)
t-max-icont-min-icon

ஒடுகத்தூரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று உள்ளது. இங்கு சுய உதவி குழுக்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கணக்கு வைத்துள்ளனர். மகளிர் சுய உதவிக்குழுவினர் இல்லாமல் மற்ற கணக்குதாரர்களும் சாதாரண நாட்களிலேயே 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருவார்

அணைக்கட்டு,

ஒடுகத்தூரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று உள்ளது. இங்கு சுய உதவி குழுக்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கணக்கு வைத்துள்ளனர். மகளிர் சுய உதவிக்குழுவினர் இல்லாமல் மற்ற கணக்குதாரர்களும் சாதாரண நாட்களிலேயே 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருவார்கள்.

ஆனால் இப்போது ரூ.500, ரூ.1,000 செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு வாடிக்கையாளருக்கு வாரத்திற்கு அதிகபட்சம் ரூ.24 ஆயிரம் மட்டுமே வங்கியில் நேரடியாக வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் வங்கியில் பணம் எடுக்க தினமும் ஏராளமானோர் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். அவர்கள் பணம் எடுப்பதற்கு டோக்கன்கள் பெற்றாலும் பணம் தீர்ந்து விட்டது எனக்கூறப்படுவதால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலைதான் கடந்த நவம்பர் 10–ந் தேதி முதல் உள்ளது. ஏ.டி.எம். மையத்திலும் நாள் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் மட்டுமே எடுக்க முடிகிறது. நேற்றும் அதிகாலை முதல் இந்த வங்கியில் பணம் எடுப்பதற்காக ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்றனர். கால்கடுக்க நின்றவர்கள் பணம் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற நிலையில் அலுவலர்களிடம் கேட்டபோது வாக்குவாதமும் ஏற்பட்டது.

எனவே போதுமான அளவில் அனைவருக்கும் பணம் கிடைக்கும்படி வங்கியில் பணம் இருப்பு வைக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story