தானிப்பாடி அருகே பள்ளியில் இருந்து கடத்தப்பட்ட 3–ம் வகுப்பு மாணவி மீட்பு வாலிபர் கைது


தானிப்பாடி அருகே பள்ளியில் இருந்து கடத்தப்பட்ட 3–ம் வகுப்பு மாணவி மீட்பு வாலிபர் கைது
x
தினத்தந்தி 24 Dec 2016 1:45 AM IST (Updated: 23 Dec 2016 7:56 PM IST)
t-max-icont-min-icon

தானிப்பாடி அருகே பள்ளியில் இருந்து 3–ம் வகுப்பு மாணவியை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– 3–ம் வகுப்பு மாணவி தானிப்பாடி அருகே சின்னியம்பேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 60). இவரது மகன் கண்ணன

தண்டராம்பட்டு,

தானிப்பாடி அருகே பள்ளியில் இருந்து 3–ம் வகுப்பு மாணவியை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

3–ம் வகுப்பு மாணவி

தானிப்பாடி அருகே சின்னியம்பேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 60). இவரது மகன் கண்ணன் (45), கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி சத்தியா. இவர்களுக்கு பவித்ரா (8), அனுஷ்கா(4), வேண்டாமல்லி (1) ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கண்ணன் தனது மனைவி சத்தியா மற்றும் மகள் வேண்டாமல்லியுடன் கேரளாவில் வசித்து வருகிறார். பவித்ராவும், அனுஷ்காவும் தாத்தா ஏழுமலை வீட்டில் வசித்து வருகின்றனர்.

தானிப்பாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பவித்ரா 3–ம் வகுப்பும், அனுஷ்கா எல்.கே.ஜி.யும் படித்து வருகின்றனர். இருவரும் தினமும் பஸ்சில் செல்வது வழக்கம்.

கடத்தல்

இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளியில் மதிய உணவு இடைவேளையின் போது பவித்ரா, அனுஷ்கா ஆகியோர் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது பள்ளிக்கு வந்த ஒரு வாலிபர் பவித்ராவை அழைத்துச் சென்றுள்ளார். மாலையில் அனுஷ்கா மட்டும் தனியாக வீடு திரும்பினார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஏழுமலை, பவித்ரா எங்கே என்று கேட்டார். அதற்கு அனுஷ்கா, விஜய் மாமா மதியம் பள்ளிக்கு வந்து அழைத்துச் சென்றார் என்று கூறி உள்ளார்.

பதறிப்போன ஏழுமலை, தனது பேத்தியை விஜய் கடத்திச் சென்றதாக தானிப்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்–இன்ஸ்பெக்டர் சிவசங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தார்.

அதில் ஏழுமலைக்கும், அதே பகுதியான விஜய் (20) என்ற வாலிபருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் ஏழுமலையை பழிவாங்க நினைத்த விஜய் சம்பவத்தன்று பள்ளிக்கு சென்று அவரது பேத்தியான பவித்ராவை கடத்திச் சென்று தனது நிலத்தில் உள்ள மோட்டார் பம்புசெட் அறையில் அடைத்து வைத்துள்ளதும் தெரியவந்தது.

வாலிபர் கைது

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பவித்ராவை மீட்டு ஏழுமலையிடம் ஒப்படைத்தனர். மேலும் சிறுமியை கடத்திச் சென்ற விஜயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story