குடிநீர் வழங்காததை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம் விருத்தாசலம் அருகே பரபரப்பு
விருத்தாசலம் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கம்மாபுரம் ஒன்றியம் மணக்கொல்லை ஊராட்சிக்குட்பட்டது ராமநாதபுரம் கிராமம். இந்த கிராமத்தில
விருத்தாசலம்,
விருத்தாசலம் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகம்மாபுரம் ஒன்றியம் மணக்கொல்லை ஊராட்சிக்குட்பட்டது ராமநாதபுரம் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் வசதிக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. மேலும் ஆழ்துளை கிணறு அமைத்து அதில் மின் மோட்டார் பொருத்தி அதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அந்த மின்மோட்டார் கடந்த 1 மாதத்திற்கு முன்பு திடீரென பழுதானது. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அருகில் உள்ள கிராம பகுதிகளுக்கும், வயல்வெளி பகுதிகளுக்கும் சென்று குடிநீர் பிடித்து வந்தனர். மின் மோட்டார் பழுதடைந்தது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
குடியேறும் போராட்டம்இந்த நிலையில் நேற்றும் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினர். பின்னர், அவர்கள் ராமநாதபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கூடம் முன்பு திரண்டு வந்தனர். தொடர்ந்து குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தையும், கம்மாபுரம் ஒன்றிய அலுவலர்களையும் கண்டிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவல் அறிந்த ஆலடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஓரிரு நாட்களில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள், ஓரிரு நாட்களில் குடிநீர் வினியோகம் செய்யாவிட்டால் கம்மாபுரம் ஒன்றிய அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்துவோம் என கூறிவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.