தஞ்சையில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
தஞ்சையில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது. குறைதீர்க்கும் கூட்டம் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை த
தஞ்சாவூர்,
தஞ்சையில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது.
குறைதீர்க்கும் கூட்டம்தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி பேசியதாவது:–
ஓய்வூதியதாரர்களுக்கு சேர வேண்டிய நிலுவையில் உள்ள மருத்துவ நலநிதி, குடும்ப பாதுகாப்பு நிதி தொடர்புடைய பணப்பலன்கள், கடந்த 2014–ம் ஆண்டு ஜூன் மாதம் 30–ந் தேதிக்கு முன்பு திரும்ப பெறப்பட்ட காசோலைகள் அனைத்தும் மாவட்ட வாரியாக பயனாளிகளை கணக்கெடுத்து வழங்கிட அறிவுறுத்தப்பட்டது. அதன்படி 51 ஓய்வூதியதாரர்களுக்கு சேர வேண்டிய மருத்துவ நலநிதி மற்றும் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.24 லட்சத்திற்கான காசோலைகள் வழங்கப்பட்டது. ஓய்வூதியதாரர்களிடம் இருந்து இன்றைக்கு(நேற்று) 84 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 70 விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது. நிலுவையில் உள்ள 14 விண்ணப்பங்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கருவூலத்துறை இணை இயக்குனர் ராமச்சந்திரன், துணை இயக்குனர் மதிவாணன், ஓய்வூதியர் நல இயக்க அலுவலர் சிவக்குமார், கணக்காளர் பனிமலர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(கணக்கு) கணேசன், மாவட்ட கருவூல அலுவலர் நடராஜன் மற்றும் 350 ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டனர்.