தஞ்சையில் ஆற்று மணலுடன் வந்த 5 லாரிகள்–மாட்டு வண்டிகள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை
தஞ்சையில் ஆற்று மணலுடன் வந்த 5 லாரிகள்– மாட்டு வண்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மாட்டு வண்டிகள் பறிமுதல் தஞ்சை மற்றும் அதை சுற்றியுள்ள ஆறுகளில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்பட்டு வருவதாக தஞ்சை வருவாய் கோட்ட அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில்
தஞ்சாவூர்,
தஞ்சையில் ஆற்று மணலுடன் வந்த 5 லாரிகள்– மாட்டு வண்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மாட்டு வண்டிகள் பறிமுதல்தஞ்சை மற்றும் அதை சுற்றியுள்ள ஆறுகளில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்பட்டு வருவதாக தஞ்சை வருவாய் கோட்ட அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வருவாய் கோட்ட அதிகாரி சுரேஷ் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை தஞ்சை பள்ளியக்ரகாரம் அருகே கும்பகோணம் பைபாஸ் சாலை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மாட்டு வண்டிகளில் மணல் நிரப்பப்பட்டு தொழிலாளர்கள் அந்த வழியாக கொண்டு வந்தனர். உடனே அந்த மாட்டு வண்டிகளை அதிகாரிகள் வழிமறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது ஆறுகளில் மணல் அள்ளப்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாட்டு வண்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் இது தொடர்பாக அம்மன்பேட்டை, வயலூர், கரந்தை, கொடிக்காலூர், பள்ளியக்ரகாரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
லாரிகள்அதேபோல அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளி வந்த லாரிகளை அதிகாரிகள் வழிமறித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த லாரிகளில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மொத்தம் 5 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக லாரி டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.