தர்மபுரி மாவட்டத்தில் காவல்துறை பணிகள் குறித்து சேலம் சரக டி.ஐ.ஜி. ஆய்வு


தர்மபுரி மாவட்டத்தில்  காவல்துறை பணிகள் குறித்து சேலம் சரக டி.ஐ.ஜி. ஆய்வு
x
தினத்தந்தி 24 Dec 2016 3:45 AM IST (Updated: 23 Dec 2016 9:55 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் காவல்துறை பணிகள், சட்டம்–ஒழுங்கு பராமரிப்பு குறித்து சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. நாகராஜன் நேற்று நேரில் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது தர்மபுரி மாவட்டத்தில் நடந்த கொலைகள் தொடர்பான வழக்குகள், கொள்ளை வழக்குகள், விபத்து தொடர்பான வழக்க

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் காவல்துறை பணிகள், சட்டம்–ஒழுங்கு பராமரிப்பு குறித்து சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. நாகராஜன் நேற்று நேரில் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது தர்மபுரி மாவட்டத்தில் நடந்த கொலைகள் தொடர்பான வழக்குகள், கொள்ளை வழக்குகள், விபத்து தொடர்பான வழக்குகள் குறித்த விவரங்களை கேட்டறிந்து பதிவேடுகளை பார்வையிட்டார். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிப்பது குறித்தும், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினார்.


Next Story