வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்


வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 24 Dec 2016 3:30 AM IST (Updated: 23 Dec 2016 10:16 PM IST)
t-max-icont-min-icon

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விவசாயிகள் சங்க கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நன்னிலம் ஒன்றிய அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க க

நன்னிலம்,

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விவசாயிகள் சங்க கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நன்னிலம் ஒன்றிய அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க கூட்டம் பேரளத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நன்னிலம் ஒன்றிய விவசாயிகள் சங்க செயலாளர் கலைவாணன் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட உறுப்பினர் காளிமுத்து, மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட உறுப்பினர்கள் மனோகரன், அக்பர்தீன், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:–

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதால் உயிர் இழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் உதவித்தொகை வழங்க வேண்டும். மேலும் 2015–16–ம் ஆண்டு வழங்க வேண்டிய பயிர்க்காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story