அவலூர்பேட்டையில் உதவி தொகை வழங்காத வங்கியை கண்டித்து முதியவர்கள் சாலை மறியல்


அவலூர்பேட்டையில் உதவி தொகை வழங்காத வங்கியை கண்டித்து முதியவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 24 Dec 2016 4:15 AM IST (Updated: 23 Dec 2016 11:03 PM IST)
t-max-icont-min-icon

அவலூர்பேட்டையில் உதவி தொகை வழங்காத வங்கியை கண்டித்து முதியவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதியோர் உதவி தொகை மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டை பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த முதியோர்கள் அரசு வழங்கும் மாதாந்திர உதவி தொகையை அவலூர்பேட்டையில்

மேல்மலையனூர்,

அவலூர்பேட்டையில் உதவி தொகை வழங்காத வங்கியை கண்டித்து முதியவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதியோர் உதவி தொகை

மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டை பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த முதியோர்கள் அரசு வழங்கும் மாதாந்திர உதவி தொகையை அவலூர்பேட்டையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மூலம் பெற்று வந்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, ஏற்பட்ட பணத்தட்டுப்பாடு காரணமாக இந்த வங்கியின் மூலம் முதியோர்களுக்கு சரியான முறையில் உதவி தொகையை வழங்க முடியவில்லை. பணம் எடுப்பதற்காக வங்கியின் முன்பு தினசரி முதியவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏமாற்றத்துடனே திரும்பினார்கள்.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த முதியவர்கள் நேற்று வங்கி அதிகாரிகளை கண்டித்து அவலூர்பேட்டையில் மங்களம் செல்லும் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த அவலூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனிடையே மறியல் பற்றி அறிந்த செஞ்சி தொகுதி எம்.எல்.ஏ. மஸ்தான், சமூக நலத்திட்ட தாசில்தார் கோடீஸ்வரி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், வங்கி அதிகாரிகளிடம் பேசி உதவி தொகையை பெற்று தருவதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தபால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story