1000, 500 ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டதால் இந்திய பொருளாதார வளர்ச்சி குறைந்து உள்ளது புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி பேட்டி
1000, 500 ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டதால், இந்திய பொருளாதார வளர்ச்சி குறைந்து உள்ளது என்று புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார். பேட்டி புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று மாலை தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட
தூத்துக்குடி,
1000, 500 ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டதால், இந்திய பொருளாதார வளர்ச்சி குறைந்து உள்ளது என்று புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
பேட்டிபுதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று மாலை தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
நெருக்கடிஅகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மீது பல குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார். அதற்கு பதில் கூறாமல் விமர்சனம் செய்வது ஏற்க முடியாது. நாட்டில் பொருளாதார நெருக்கடியை பிரதமர் உருவாக்கி உள்ளார். 86 சதவீதம் புழக்கத்தில் உள்ள 1000, 500 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்து உள்ளார்.
அதற்கு மாற்று ஏற்பாடுகளை மத்திய அரசோ, பிரதமரோ, நிதியமைச்சரோ செய்யவில்லை. விவசாயிகள் உரம், இடுபொருட்கள் வாங்கமுடியாத நிலை உள்ளது. கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடன்பெற முடியவில்லை.
வளர்ச்சி குறைந்துள்ளதுஏ.டி.எம்.களில் ஒரு நாளுக்கு ரூ.2,500 தான் பெறமுடியும் என்று கூறுகிறார்கள். கணக்கில் காட்டப்பட்ட பணத்தை எடுக்கக்கூடாது என்று தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது. பிரதமர் பணஅட்டை பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறார். கிராமப்புறங்களில் 70 சதவீதம் மக்களிடம் பண அட்டை கிடையாது. பணப்பிரச்சினையால் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது.
அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்திய பொருளாதாரத்தை பிரதமர் கேள்விக்குறியாக்கி விட்டார். பிரதமரின் இந்த அறிவிப்பால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்து உள்ளது. இந்த திட்டத்தால் ஒட்டுமொத்த மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது எம்.எல்.ஏ.க்கள் வசந்தகுமார், விஜயதாரணி ஆகியோர் உடன் இருந்தனர்.