பாலியல் தொல்லை புகார்: விசாரணைக்கு வந்த ஊர்க்காவல் படையை சேர்ந்த பெண் தற்கொலை முயற்சி
பாலியல் தொல்லை புகார் தொடர்பாக விசாரணைக்கு வந்த ஊர்க்காவல் படையை சேர்ந்த பெண் தற்கொலைக்கு முயன்றதால் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பாலியல் புகார் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, கோபி ஆகிய 3 இடங்களில் ஊர்க்காவல் படை அ
ஈரோடு,
பாலியல் தொல்லை புகார் தொடர்பாக விசாரணைக்கு வந்த ஊர்க்காவல் படையை சேர்ந்த பெண் தற்கொலைக்கு முயன்றதால் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பாலியல் புகார்ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, கோபி ஆகிய 3 இடங்களில் ஊர்க்காவல் படை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஊர்க்காவல் படையில் பணியாற்றும் பெண்களுக்கு அதே அலுவலகத்தில் பணியாற்றும் வீரர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுப்பதாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சிவக்குமார் உத்தரவின்பேரில் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம் விசாரணை நடத்தி வருகிறார். இதில் புகார் தெரிவிக்கப்பட்ட ஊர்க்காவல் படையில் பணியாற்றும் 2 வீரர்களிடமும், புகார் மனு அளித்த 3 பெண்களிடமும் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம் விசாரணை நடத்தினார்.
இந்தநிலையில் புகார் கொடுத்த சாகீராபேகத்தை (வயது 27) மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் விசாரணைக்காக அழைத்து இருந்தார். இதனால் சாகீராபேகம் நேற்று மதியம் 1 மணி அளவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்றார்.
தற்கொலை முயற்சிஅவர் போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமாரை சந்திப்பதற்காக காத்திருக்கும் அறையில் உட்கார்ந்து இருந்தார். அப்போது திடீரென சாகீராபேகம் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்ததும் அங்கிருந்த போலீசார் அருகில் சென்று அவருடைய முகத்தில் தண்ணீரை தெளித்தனர். மயக்கம் தெளிந்த அவர், தற்கொலை செய்துகொள்வதற்காக அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு இருப்பதாக தெரிவித்தார். அதைத்தொடர்ந்து போலீசார், சாகீராபேகத்தை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து ஊர்க்காவல் படையை சேர்ந்த பெண்கள் சிலர் கூறும்போது, ‘‘சாகீராபேகம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு செல்வதற்கு முன்பு, புகார் கூறப்பட்டவர் மீது முறையான நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் என்று கூறிக்கொண்டு இருந்தார். இதனால் மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்று இருக்கலாம்.’’, என்றனர்.
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு விசாரணைக்காக வந்த ஊர்க்காவல் படையை சேர்ந்த சாகீராபேகம் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.